அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு 25 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு..!!

இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு கூடுதலாக 25 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விமானங்களானது ஜூன் 9 முதல் 19 வரையிலான தேதிகளில் அபுதாபியிலிருந்து 14 விமான சேவைகளும் துபாயில் இருந்து 11 விமான சேவைகளும் என மொத்தம் 25 விமானங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு அமீரகத்திலிருந்து விமானம் செல்வதாக கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் இருக்கும் நான்கு விமான நிலையங்களுக்கு அமீரகத்தில் இருந்து 10 விமானங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், இந்தியாவின் மற்ற நகரங்களான புது தில்லி, ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்கும் விமான சேவைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
source : Khaleej Times