அபுதாபிக்கும் பிற நகரங்களுக்கும் இடையேயான இயக்கத்திற்கு அனுமதி பெறுவது எப்படி..??
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிக பெரிய அளவிலான கொரோனா பரிசோதனையை முன்னிட்டு, அபுதாபிக்கும் அமீரகத்தின் மற்ற நகரங்களான அல் அய்ன், அல் தஃப்ரா, துபாய், ஷார்ஜா, அஜ்மான் உட்பட அனைத்து பிற பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்து இயக்கத் தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அபுதாபியின் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை குழு தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இயக்க தடை அமலில் இருக்கும் இந்த ஒரு வார காலத்திலிருந்து முக்கிய துறையில் பணிபுரிபவர்களுக்கும், இயக்க அனுமதி பெற்று பயணம் மேற்கொள்பவர்களுக்கும் மட்டுமே விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, தடை செய்யப்பட்டிருக்கும் இந்த ஒரு வார காலத்தில் அபுதாபிற்கும் அமீரகத்தின் பிற நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்திற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இயக்க அனுமதி வழங்குவதாக அபுதாபி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அபுதாபி போலீஸ் இணையதளத்தில் ‘போக்குவரத்து அனுமதி அமைப்பு – அபுதாபி’ (‘Traffic Permits System – Abu Dhabi’) என்ற லிங்க் வழியாக மக்கள் அனுமதி பெறலாம் எனவும் அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இயக்க கட்டுப்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் வழங்கிய முடிவுகளை கடைப்பிடிக்கவும், தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் குறிப்பிட்ட நேரங்களுக்கு இணங்கவும் பொதுமக்களை அபுதாபி காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.