அபுதாபி பிக் டிக்கெட்டில் 12 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வென்ற இந்தியர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பிக் டிக்கெட் அபுதாபி ரேஃபிள் போட்டியின் இந்த மாதத்திற்கான ட்ராவில் இந்தியாவை சேர்ந்த தற்பொழுது அஜ்மனை வசிப்பிடமாக கொண்ட அசேன் முஜிபுரத் என்பவர் வெற்றியடைந்துள்ளார்.
அஜ்மானில் வசிக்கும் அசேன், கடந்த மே மாதம் 14 ம் தேதி பிக் டிக்கெட்டை வாங்கியுள்ளார். பிக் டிக்கெட் ட்ராவில் வெற்றியடைந்துள்ள இவர் 12 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், பிக் டிக்கெட் தற்பொழுது மாதாந்திர டிராவில் இன்னும் அதிகமான பரிசுகளை வழங்கவிருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 15 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையுடன் டிராவில் கூடுதலாக 15 பரிசுகள் வழங்கப்படும் என்றும் அமைப்பாளர்கள் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்திருந்தனர். அதாவது நான்கு நபர்களுக்கு 100,000 திர்ஹம்ஸ், இரு நபர்களுக்கு 80,000 திர்ஹம்ஸ், மூன்று நபர்களுக்கு 75,000 திர்ஹம்ஸ், மூன்று நபர்களுக்கு 50,000 திர்ஹம்ஸ், மூன்று நபர்களுக்கு 25,000 திர்ஹம்ஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், வழக்கமாக அறிவிக்கப்படும் 10 வெற்றியாளர்களுக்கு பதிலாக அடுத்த மாதத்தில் முதல் பரிசு பெறும் வெற்றியாளர் உட்பட மொத்தம் 16 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.