UAE: நான்காம் கட்ட விமான பட்டியல் வெளியீடு.. மொத்தம் 59 விமானங்கள்.. தமிழகத்திற்கு 5..!! கேரளாவிற்கு 39..!!
வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டம் வரும் ஜூலை மாதம் 3 ம் தேதியிலிருந்து தொடங்கப்படும் என நேற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நான்காம் கட்ட பயண திட்டத்திற்கான அட்டவணையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த நான்காம் திட்ட அட்டவணையின்படி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு மட்டும் 59 விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் விமானம் வரும் ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் இந்தியாவிற்கு இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு செல்லும் 59 விமானங்களில் 39 விமானங்கள் கேரளா மாநிலத்திற்கும், 5 விமானங்கள் தமிழகத்திற்கும், உத்திர பிரதேசம் மற்றும் தெலுங்கனாவிற்கு தலா 4 விமானங்களும், பஞ்சாபிற்கு 3 விமானங்களும், டெல்லிக்கு 2 விமானங்களும், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானிற்கு தலா 1 விமானமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் வழக்கம் போல ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கே அதிகளவிலான விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நான்காம் திட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு செல்லும் அனைத்து விமானங்களும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் விமானம் ஜூலை 1 ஆம் தேதி துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமீரகத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பயண தேதிகளின் விபரம்.. .
வரிசை எண் | பயண தேதி | புறப்படும் இடம் | செல்லும் இடம் |
1 | ஜூலை 1, 2020 | துபாய் | சென்னை |
2 | ஜூலை 4, 2020 | துபாய் | சென்னை |
3 | ஜூலை 7, 2020 | அபுதாபி | சென்னை |
4 | ஜூலை 9, 2020 | துபாய் | சென்னை |
5 | ஜூலை 11, 2020 | துபாய் | சென்னை |
Flight Details from UAE to India (2) pic.twitter.com/lLjjtAjeFQ
— Khaleej Tamil (@khaleej_tamil) June 27, 2020