அமீரக செய்திகள்
UAE-VBM4: மதுரை, திருச்சி, கோவை, சென்னை உட்பட இந்தியாவிற்கு 104 கூடுதல் விமானங்கள்..!! ஜூலை 15 லிருந்து செல்லும் விமான பட்டியல் வெளியீடு..!!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானங்களில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா செல்வதற்கான கூடுதல் விமானங்களை அறிவித்துள்ளது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நான்காம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் கூடுதலாக 104 விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் ஜூலை 15 முதல் ஜூலை 31 வரையிலான தேதிகளில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அறிவிக்கப்பட்ட 104 விமானங்களில் 13 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள விமானங்கள் தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.