அமீரக செய்திகள்

UAE: அபுதாபியில் உள்ள முக்கிய சாலைகள் மூடல்.. காரணம் என்ன..?

அபுதாபியில் இந்த வார இறுதியில் பல முக்கிய சாலை மூடப்படுவதாக எமிரேட் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அதன் சமூக ஊடகத்தில் அறிவித்து, மாற்றுப்பாதையில் கவனமாக வாகனம் ஓட்டுமாறு வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளது.

ITC கூற்றுப்படி, ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் சாலையில் உள்ள யாஸ் தீவை நோக்கிச் செல்லும் இரண்டு பாதைகள் நேற்று (ஆகஸ்ட் 19, வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 22 திங்கள் காலை 5 மணி வரை மூடப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 23, செவ்வாய்கிழமை காலை 5 மணி வரை வலதுபுற பாதை வாகன போக்குவரத்துக்காக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அபுதாபி-அல் ஐன் சாலையில் (E22), அல் கனதீர் தெரு மற்றும் பனியாஸ் வெஸ்ட் ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள இடதுபுறப்பாதை, நேற்று இரவு (வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 22, திங்கள் காலை 5 மணி வரை மூடப்பட்டுள்ளது.

வார இறுதியில் அபிதாபியின் முக்கிய சாலைகளில் சில பகுதி மூடல்கள் இருக்கும். அதன்படி, ஆகஸ்ட் 19 வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை, ஷேக் சயீத் பின் சுல்தான் தெருவில், சயீத் முதல் தெரு மற்றும் அல் மவ்கிப் தெரு இடையே இரு திசைகளிலும் உள்ள இரண்டு வலதுபுற பாதைகளும் மூடப்பட்டுள்ளது. அல் பாட்டீன் பகுதியில் உள்ள அல் ஃபலாஹ் தெருவில் இருந்து கார்னிச் தெரு வரை உள்ள இரண்டு வலதுபுற பாதைகளும் ஆகஸ்ட் 20 சனிக்கிழமை அதிகாலை 12 மணி முதல் ஆகஸ்ட் 22 திங்கள் காலை 5 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

எனவே பராமரிப்பு காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டவும், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றவும் ITC வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!