அமீரக செய்திகள்

துபாயில் பார்க்கிற்கு செல்ல நோல் கார்டுகள் பயன்படுத்த முடியாது..!! மாற்று வழிகள் என்ன..??

துபாயில் உள்ள பல பொதுப் பூங்காக்களில் நோல் கார்டுகள் ஏற்கப்படவில்லை என்று பூங்காக்களைப் பார்வையிட்ட குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் du மற்றும் துபாய் முனிசிபாலிட்டி இடையே கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, பெரும்பாலான துபாய் பூங்காக்களில் நோல் கார்டு கட்டண முறை அகற்றப்பட்டது.

இந்தக் கூட்டாண்மையானது டிக்கெட் இல்லாத நுழைவு, தடையற்ற அடையாள மேலாண்மை, தொழிலாளர் திருப்தி, தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் பொதுப் பூங்காக்களில் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், சில பார்க்குகளில் நோல் கார்டு ஏற்கப்படுகிறது, துபாயின் குரானிக் பூங்காவில் டிக்கெட் வழங்குவது இன்னும் நோல் கார்டு முறையின் கீழ் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

 

பார்க்கில் டிக்கெட் எடுப்பது எப்படி?

துபாயில் பார்க்கிற்கு செல்பவர்கள் இப்போது பணம் அல்லது கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். பின்னர் இவை முந்தைய நோல் கார்டு இயந்திரங்கள் இருந்த பார்க்குகளின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில் ஸ்கேன் செய்யப்படுகிறது.

அதேசமயம், சஃபா பார்க் போன்ற சில பார்க்குகள் பார்வையாளர்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் பணம் செலுத்தும் ஸ்மார்ட் பேமெண்ட் விருப்பத்தையும் வழங்குகின்றன. எனவே, பார்வையாளர்கள் Samsung Pay, Google Pay அல்லது Apple Pay மூலம் பணம் செலுத்தலாம் மற்றும் டிக்கெட் இல்லாத செயல்முறை மூலம் பார்க்கிற்குள் நுழையலாம்.

ஒவ்வொரு பார்க்கிலும் டிக்கெட்டுகளின் விலை ஒரே மாதிரியாக இருக்கும், பரிவர்த்தனை முறை மட்டும் மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு, துபாய் முனிசிபாலிட்டி, பார்க்கிற்குள் நுழைவதற்கு நோல் கார்டு வைத்திருப்பதைக் கட்டாயமாக்கியது. சொந்தமாக நோல் கார்டு இல்லாதவர்கள் பார்க்கில் இருந்து 25 திர்ஹம்களுக்கு பச்சை நிற நோல் கார்டை வாங்க வேண்டும்.

நோல் கார்டுகளை ஸ்கேன் செய்ய பிரத்யேக வாயில்கள் நிறுவப்பட்டிருந்தன, மேலும் சில பார்க்கிற்குள் நுழைய குடியிருப்பாளர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் நோல் அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தும் முறை இருந்தது. இந்த சூழலில், புதிய அமைப்பு, தங்களுக்குப் பிடித்தமான பார்க்குகளுக்கு செல்ல, நோல் கார்டுகளைத் தயாராக வைத்திருக்கும் பல குடியிருப்பாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூறலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!