அமீரக செய்திகள்

ஜூலை 15 முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் டிக்கெட் முன்பதிவு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும்..!! துணை தூதரகம் அறிவிப்பு..!!

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட நடவடிக்கையில் கூடுதலாக 104 விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு வரும் ஜூலை 15 முதல் ஜூலை 31 வரையிலான நாட்களில் இயக்கப்படும் என நேற்று (ஜூலை 9) இந்திய வெளியுறவு அமைச்சகம் பட்டியல் வெளியிட்டிருந்தது. இந்த கூடுதல் விமானங்களில் தமிழகத்திற்கு மதுரை, திருச்சி, கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தமாக 13 விமானங்கள் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முதல் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் விமானங்களுக்கான பயண டிக்கெட் விற்பனை இன்று பிற்பகல் 2 மணி முதல் தொடங்கும் என இந்திய துணை தூரகம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய துணை தூதரகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “இந்திய தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தின் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்தியர்கள், பயணத்திற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்திசெய்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முன்பதிவு அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது www.airindiaexpress.in என்ற இணையதளத்திலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்” என தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சுற்றறிக்கைப்படி இந்தியா செல்லவிருக்கும் பயணிகள் நேரடியாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஏர் இந்தியா அலுவலகம் வாயிலாகவோ அல்லது ஏதேனும் முகவர்கள் வாயிலாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தாலும்,  தூதரகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூலை 15 முதல் மதுரை, திருச்சி, கோவை, சென்னை உட்பட தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!