அமீரக செய்திகள்

UAE: கோலாகலமாக துவங்கியுள்ள ஷேக் சையத் ஃபெஸ்டிவல்..!! குடியிருப்பாளர்களுக்கு இலவச பேருந்து சேவை..!!

அபுதாபியின் அல் வத்பாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் இந்த வருடம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ஷேக் சையத் ஃபெஸ்டிவல் 2022க்கு பொதுமக்கள் பயணம் செய்ய இலவச பேருந்து சேவைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியவரான மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பெயரிடப்பட்ட இந்த திருவிழா இன்று தொடங்கி மார்ச் 18, 2023 வரை நடைபெறவுள்ளது.

பல்வேறு சர்வதேச நாட்டுப்புறவியல் அரங்குகள், கலாச்சார நிகழ்வுகள், கச்சேரிகள், வாட்டர் மற்றும் லேசர் ஷோக்கள், வானவேடிக்கைகள், க்ளோ கார்டன் மற்றும் அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் பலவகையான நடவடிக்கைகள் இந்த ஃபெஸ்டிவலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை முன்னிட்டு அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) திங்கள் முதல் வியாழன் வரை பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல 8 பேருந்துகளும், வெள்ளி முதல் ஞாயிறு வரை 10 பேருந்துகளும் அபுதாபி முழுவதிலும் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த கட்டணமில்லா சேவையானது திங்கள் முதல் வியாழன் வரை ஒரு நாளைக்கு 30 பயணங்கள் (trips) இயக்கப்படும் என்றும் வெள்ளி முதல் ஞாயிறு வரை மற்றும் பொது விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 36 பயணங்களாக (trips) உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சேவையானது 25 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை அபுதாபியில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் தொடங்கி ரப்தானில் உள்ள கூட்டுறவு சொசைட்டி சூப்பர் மார்க்கெட்டுக்கு (Co-Operative Society Supermarket) செல்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் அங்கிருந்து, பனியாஸ் கோர்ட் வாகன நிறுத்துமிடத்திற்குச் (Baniyas Court parking lot) சென்று இறுதியாக அல் வத்பாவில் உள்ள விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லும் என கூறப்பட்டுள்ளது.

ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் இருந்து மெயின் சிட்டிக்கான பயணம் மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு 11:30 மணி வரை 30 நிமிட இடைவெளியில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளுக்கான சேவை நேரத்தைக் காண, ITC இணையதளத்தைப் (www.itc.gov.ae) பார்வையிடலாம் அல்லது நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் சேவை ஆதரவு மையத்தை 800-850 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், “Darbi” ஸ்மார்ட் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!