வளைகுடா செய்திகள்

ஓமானில் 1.62 மில்லியனை தாண்டிய வாகனங்களின் எண்ணிக்கை..!! புள்ளி விவரங்கள் வெளியீடு..!!

ஓமான் நாட்டின் புள்ளியியல் மற்றும் தகவல்களுக்கான தேசிய மையம் (NCSI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 2023 இறுதியில் ஓமானில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1.62 மில்லியனை எட்டியுள்ளது என தெரியவந்துள்ளது. ஓமானில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 79.6 சதவீதம் அதாவது 1,294,252 வாகனங்கள் தனியார் பதிவைக் கொண்டுள்ளன எனவும், 237,621 வாகனங்கள் வணிகப் பதிவு கொண்டவை எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், டாக்ஸி வாகனங்களின் எண்ணிக்கை 27,983 ஆகவும், வாடகை வாகனங்களின் எண்ணிக்கை 30,856 ஆகவும், அரசு வாகனங்களின் எண்ணிக்கை 11,832 ஆகவும், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 6,758 ஆகவும் பதிவாகியுள்ளது. இவற்றில் தற்காலிக பதிவு கொண்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 8,556 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிராக்டர்களின் எண்ணிக்கை 1,275 ஆகவும், தூதரக நிறுவன பதிவுகள் கொண்ட வாகனங்கள் 844 ஆகவும் உள்ளன. பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எடையைப் பொறுத்தவரை, 3 டன்களுக்கு குறைவான எடையுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 1,467,675 ஆகவும், 10 டன்களுக்கு மேல் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை 71,931 ஆகவும், 3-7 டன்களுக்கு இடையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை 47,865 ஆகவும், 7-10 டன்களுக்கு இடையில் 38,070 ஆகவும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!