அமீரக செய்திகள்

புதிய உற்சாகத்துடன் மீண்டும் கோலாகலமாக தொடங்கும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்..!! தேதியை வெளியிட்ட DFRE..!!

ஒவ்வொரு வருடமும் துபாயில் வெகு விமரிசையாக நடைபெறும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (Dubai Shopping Festival) 28-வது பதிப்பு நடைபெறவிருக்கும் தேதியானது தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி DSF இந்த வருடம் வரும் டிசம்பர் 15 முதல் அடுத்த வருடம் ஜனவரி 29 வரை நடைபெறும் என்று தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த DSF நடைபெறும் 46 நாட்களும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் புதுமையான அனுபவங்களை பெறலாம். அத்துடன் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் பெரிதளவில் நீக்கப்பட்ட பின்னர் நடத்தப்படவிருக்கும் முதல் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் இதுவே ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் உலகப் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகள், பிரமிக்க வைக்கும் ஒளி மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள், ட்ரோன் நிகழ்ச்சி, மால்களில் ப்ரொமோஷன், தள்ளுபடி, பொழுதுபோக்கு மற்றும் பல புதிய சிறப்பு விழாக்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை நிறுவனங்களின் (DFRE) தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் காஜா கூறுகையில் “துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் 28 வது பதிப்பானது, உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாவாசிகளுக்கு துபாயில், அதன் பிரத்யேக நீண்ட ஷாப்பிங் ஃபெஸ்டிவலை அனுபவிக்க மற்றொரு வாய்ப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், “இந்த DSF-ல், பொழுதுபோக்கு, உணவு, ஷாப்பிங் போன்ற பல்வேறு அனுபவங்களைக் கொண்டாடுவதற்கும் மகிழ்வதற்கும் அனைவரையும் அழைக்கிறோம். எங்களுடன் இணைந்து, உலகத் தரம் வாய்ந்த அனுபவங்களின் மற்றொரு சீசனை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். அத்துடன் மற்றுமொரு மறக்க முடியாத நினைவுகளை உங்களுக்கு வழங்க தயாராயுள்ளோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!