அமீரக செய்திகள்

அபுதாபி: பேருந்து, பார்க்கிங் கட்டணம், டோல் கேட்டின் ரமலான் மாத அட்டவணையை வெளியிட்ட ITC..!!

அபுதாபி போக்குவரத்து கழகத்தின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) புனித ரமலான் மாதத்தில் அபுதாபி முழுவதும் இயக்கப்படும் பொது போக்குவரத்து சேவைகளின் மாற்றம் செய்யப்பட்ட நேர அட்டவணையை அறிவித்துள்ளது. மேலும் அதனுடன் கட்டண பார்க்கிங் (Mawaqif) நேரங்கள், டோல் கேட் அமைப்பு செயல்படுத்தும் நேரம், பேருந்துகள் மற்றும் ஃபெர்ரி இயக்கப்படும் நேரங்கள் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டண பார்க்கிங் (மவாகிஃப்) சேவை

ரமலான் மாதத்தில் சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரையிலும் கட்டண பார்க்கிங் அமல்படுத்தப்படும்.

வியாழக்கிழமைகளில், பார்க்கிங் கட்டணம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், இரவு 9 மணி முதல் 12 மணி வரையிலும் செயல்படுத்தப்படும்.

வெள்ளிக்கிழமை காலை 12 மணி முதல் சனிக்கிழமை காலை 8.59 மணி வரை எந்த கட்டணமும் செயல்படுத்தப்படாது.

இரவு நேர சிறப்பு தொழுகையான தாராவீஹ் தொழுகையில் கலந்து கொள்ளும் நபர்கள், தொழுகைகளின் போது மசூதிகளைச் சுற்றியுள்ள பார்க்கிங் இடங்களில் நிறுத்தும் வாகனங்களுக்கு மவாகிஃப் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

தினமும் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 8.00 மணி வரை குடியிருப்பாளர்களுக்கான பார்க்கிங் (resident parking) இடங்கள் தொடர்பான விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.

டார்ப் டோல் கேட் சிஸ்டம் (Darb Toll Gate System)

அபுதாபியில் அமைந்துள்ள டோல் கேட் செயல்படும் நேரம் ரமலான் மாதத்தில் சனிக்கிழமை முதல் வியாழன் வரையிலான நாட்களில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையிலும் மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் கடக்கும் வாகனங்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.

அபுதாபி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கான பஸ் சேவைகள்

A10, A20, A40, 405 மற்றும் 406 தவிர அபுதாபி நகரத்திலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இயக்கப்படும் அனைத்து பொது பேருந்துகளும் வழக்கமான அட்டவணைப்படி இயங்கும். மேலே குறிப்பிட்டுள்ள பேருந்துகள் மாலை 6 மணி வரை மட்டுமே கிடைக்கும். அதேசமயம் பேருந்து எண் 26 ரமலான் மாதத்தின் முதல் நாளிலிருந்து ரத்து செய்யப்படும்.

அல் அய்ன் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள்

அல் அய்ன் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்து வழித்தடங்கள் ரமலான் மாதத்தில் பின்வருமாறு நிறுத்தப்பட்டுள்ளது.

சேவை எண். 900, 940, 960, 990, 590, 495: கடைசி பயணம் அதிகாலை 1 மணிக்கு நீட்டிக்கப்படும்.

சேவை எண். 930, 950, 980: 50 நிமிட இடைவெளியில் அதிகாலை 1 மணி வரை செயல்படும்.

சேவை எண். 970: 45 நிமிட இடைவெளியில் அதிகாலை 1 மணி வரை செயல்படும்.

சேவை எண். 450: கடைசி பயணம் இரவு 9 மணிக்கு நீட்டிக்கப்படும்.

சேவை எண். 460, 491, 496, 560, 595: கடைசி பயணம் காலை 12 மணிக்கு நீட்டிக்கப்படும்.

சேவை எண். 550: கடைசி பயணம் இரவு 10 மணிக்கு நீட்டிக்கப்படும்.

சேவை எண். 901, 941, 902, 991, 350, 360, 375, 380, 390, X90, H1: எந்த மாற்றங்களும் இல்லாமல் அதன் வழக்கமான நேர அட்டவணையில் இயங்கும்.

அல் தஃப்ரா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள்

அல் தஃப்ரா பிராந்தியத்தில் பேருந்து சேவைகள் தங்களது வழக்கமான அட்டவணைப்படி தொடர்ந்து செயல்படும், அதேசமயம் காலை 6.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை இப்தார் நேரத்தில் மட்டும் நிறுத்தப்படும்.

ஃபெர்ரி சேவைகள்

புனித ரமலான் மாதத்தில் டல்மா தீவுக்கும் (dalma island) ஜெபல் அல் தன்னா துறைமுகத்துக்கும், அதே போன்று அல் சாதியத் தீவுக்கும் அல் அலியாவுக்கும் இடையிலான ஃபெர்ரி சேவைகள் தொடர்ந்து இயங்கும்.

வாடிக்கையாளர் சேவை மையங்கள்

அபுதாபி, ரப்தான், அல் ஜஹிலி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும். இருப்பினும் 24 மணி நேர சேவைக்கு வாடிக்கையாளர்கள் ITC.யின் வலைத்தளம்: www.itc.gov.ae, டார்ப் ஆப் மற்றும் 80088888 அல்லது 600535353 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!