அமீரக செய்திகள்

ஈத் அல் பித்ர் 2021: அமீரகம் முழுவதும் நடத்தப்படவிருக்கும் பெருநாள் தொழுகைக்கான நேரங்கள் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிகளில் இந்த வருட ஈத் அல் பித்ர் தொழுகையனது சமூக இடைவெளி உள்ளிட்ட கடுமையான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருநாள் தொழுகைக்கான நேரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷவ்வால் பிறை எப்போது காணப்படுகிறது என்பதைப் பொறுத்து, ஈத் அல் பித்ர் மே 12 புதன்கிழமை அல்லது மே 13 வியாழக்கிழமை கொண்டாடப்படும். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈத் தொழுகைக்கான நேரங்களை வெளியிட்டுள்ளனர்.

பெருநாள் தொழுகை நேரங்கள்

அபுதாபி

  • மெயின் சிட்டி: காலை 5.57
  • அல் அய்ன்: காலை 5.50
  • மதினத் சையத்: காலை 6.01

துபாய்

  • துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) படி, பெருநாள் தொழுகை அதிகாலை 5.52 மணிக்கு நடத்தப்படும்.

ஷார்ஜா

  • மெயின் சிட்டி மற்றும் ஹம்ரியா: காலை 5.51
  • அல் தைத் மற்றும் படாயே (Al Dhaid and Batayeh): காலை 5.50
  • அல் மடம் மற்றும் மிலீஹா (Al Madam and Mleiha): காலை 5.51
  • கிழக்கு மண்டலம் (Eastern region): காலை 5:48

ராஸ் அல் கைமா: காலை 5.48

ஃபுஜைரா: காலை 5.48

உம் அல் குவைன்: காலை 5.50

அஜ்மான்: காலை 5.51

பிரசங்கம் உட்பட பெருநாள் தொழுகையின் மொத்த நேரமானது 15 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. தொழுகைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு மசூதிகள் மற்றும் முஸல்லாக்கள் திறக்கப்பட்டு தொழுகை முடிந்ததும் உடனடியாக மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!