அமீரக செய்திகள்

ஃப்ளு தடுப்பூசி சேவைகளை வழங்கும் துபாய் சுகாதார ஆணையம்..!! குறிப்பிட்ட குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு..!!

துபாய் சுகாதார ஆணையத்தின் (DHA) ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்களில் குடியிருப்பாளர்கள் தற்பொழுது ஃப்ளு காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்பூசியானாது குறிப்பிட்ட நபர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியானது அமீரக குடிமக்களுக்கும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் மற்ற குடியிருப்பாளர்கள் 50 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்தி இந்த தடுப்பூசியைப் போட்டு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு துபாய் சுகாதார ஆணையமானது ஃப்ளு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்ததோடு, ​​கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஃப்ளுவிற்கான தடுப்பூசி பெறுவதன் முக்கியத்துவத்தையும் அது வலியுறுத்தியது. ஃப்ளு தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பை வழங்காது என்றாலும், இது நுரையீரலை பலவீனப்படுத்தக்கூடிய நோய்களுக்கு எதிராக ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

தடுப்பூசி போடப்படும் இடங்கள்

  • ஜுமேரா லேக் டவர்ஸ் (Jumeirah Lake Towers), அப்டவுன் மிர்டிஃப் ((Uptown Mirdif) மற்றும் சிட்டி வாக் (City Walk, Smart Salem Centre) ஆகிய மூன்று DHA மருத்துவ மையங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். இங்கு முன் அனுமதி பெறாமலே செல்லலாம்.
  • பிற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு, அப்பாய்ண்ட்மென்ட் செய்வது கட்டாயம் என்றும் அப்பாய்ண்ட்மென்ட் பெறுவதற்கு குடியிருப்பாளர்கள் 800DHA (800342) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் அல் படா (Al Badaa), அல் லுசைலி (Al Lusaily), அல் மன்கூல் (Al Mankhool), அல் சஃபா (Al Safa), நாட் அல் ஷெபா (Nad Al Sheba), ஜபீல் (Zabeel), மிஷார் (Mizhar) மற்றும் துவார் (Twar) ஆகியவை ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
  • பெண்களுக்கு மட்டுமே சேவை செய்யும் அல் மம்சார் சுகாதார மையமும் (Al Mamzar Health Centr) காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும், அல் பர்ஷா மற்றும் நாட் அல் ஹம்ர் 24/7 மையங்கள் (Al Barsha and Nad Al Hamr)  காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை தடுப்பூசி சேவைகளை வழங்கும்.

முன்பதிவு செய்ய மற்றும் தடுப்பூசி போடப்படும் மையங்களின் இருப்பிடங்கள் மற்றும் செயல்படும் நேரங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு 800DHA (800342) ஐ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!