அமீரக செய்திகள்

UAE: குடியிருப்பாளர்களுக்கான ஃப்ளூ தடுப்பூசி பிரச்சாரம் ஆரம்பம்..!! இலவசமாக தடுப்பூசி போட தகுதியுள்ளவர்கள் யார்..??

அபுதாபியில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA) தனது வருடாந்திர ஃப்ளூ தடுப்பூசி பிரச்சாரத்தை அபுதாபி முழுவதும் தொடங்கியுள்ளது.

சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம், அபுதாபி சுகாதாரத் துறை மற்றும் பொது சுகாதாரத்திற்கான அபுதாபி மையம் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட ‘உங்களைத் பாதுகாத்துக்கொள்ளுங்கள், உங்கள் சமூகத்தைப் பாதுகாக்கவும்’ பிரச்சாரத்திற்கு ஏற்ப இந்த இயக்கம் அமைந்துள்ளது.

SEHA-வின் வெளிப்புற சிகிச்சை சேவைகளின் செயல் இயக்குநர் டாக்டர் நூரா அல் காயிதி, சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கடுமையான அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையின் அபாயத்தை குறைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “நாம் பருவ கால காய்ச்சல் (seasonal influenza) போன்ற பிற வைரஸ்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். இந்த ஆண்டு கடுமையான ஃப்ளூ அறிகுறிகளின் அபாயத்தைக் குறைப்பதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய ஃப்ளூ தொடர்பான சிக்கல்களைக் குறைப்பதற்காக, ஃப்ளூ தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு அனைவரையும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள பிரிவினரை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசியானது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், அனைத்து திகா (Thiqa) அட்டைதாரர்கள், ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.

மற்ற அனைத்து பிரிவினருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள 50 திர்ஹம் ஆகும்.

அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தாஃப்ராவில் உள்ள சேஹா சுகாதார மையங்கள் மற்றும் கொரோனா டிரைவ்-த்ரூ சேவை மையங்களில் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஃப்ளூ தடுப்பூசி கிடைக்கிறது.

தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய, சேஹா கால் சென்டர் 80050 அல்லது சேஹா ஆப் (seha app) மூலம் அப்பாய்மெண்டை திட்டமிடலாம்.

வீட்டில் இருந்தபடியே தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 350 திர்ஹம் செலுத்த்வேண்டும். வீட்டிற்கு வருவதற்கான முன்பதிவிற்கு 027116091 (அபுதாபி) மற்றும் 027111502 (அல் அய்ன்) என்பதை தொடர்பு கொள்ளலாம். நிறுவனங்களும் இதே எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!