அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 2021) புதிதாக 104 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 738,372 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,118 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 179 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 731,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.