அமீரக செய்திகள்

துபாய்: 60 சதவீதம் இயற்கை சூழலாக மாற்றப்படும் பிரதமரின் ‘நகர்ப்புற திட்டம்-2040’ .. உலகின் சிறந்த வாழ்விடமாக மாறவிருக்கும் துபாய்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது அவர்கள் புதிய ‘துபாய் 2040 நகர்ப்புற திட்டத்திற்கு’ இன்று (சனிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.

துபாயை உலகின் மிக சிறந்த நகரமாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி, துபாயின் மொத்த பரப்பளவில் 60 சதவீதம் இயற்கை இருப்புக்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ், பொருளாதார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பகுதிகள் ஒன்றரை மடங்கு அதிகரிக்கும் என்றும் துபாய் கடற்கரைகளின் நீளம் அடுத்த இருபது ஆண்டுகளில் 400 சதவீதம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் பகிர்ந்த செய்தியில், “அடுத்த 20 ஆண்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து துபாயை உலகின் சிறந்த வாழ்விடமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், “புதிய துபாய் நகர்ப்புற திட்டத்தின் இறுதி குறிக்கோள், அடுத்த 20 ஆண்டுகளுக்கு துபாய் நகரின் வாழ்வியலை வடிவமைப்பதும், மக்களுக்கு உலகின் சிறந்த வாழ்க்கையை வழங்குவதும் மற்றும் துபாயில் அதிகரிக்கவிருக்கும் மக்கள்தொகை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு தயாராக இருப்பதும் ஆகும். நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய அனைவருக்கும் உதவுமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்” என்று தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துபாயின் நகர்ப்புற திட்டம்-2040, துபாயின் வளர்ச்சிக்காக 1960 முதல் உருவாக்கப்பட்ட ஏழாவது திட்டமாகும்.

துபாயில் 1960 மற்றும் 2020 க்கு இடையில், துபாயின் மக்கள் தொகை 40,000 முதல் 3.3 மில்லியனாக 80 மடங்கு அதிகரித்திருப்பதும் துபாயின் நகர்ப்புற பகுதி 170 மடங்கு அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!