அமீரக செய்திகள்

அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும்போது LUGGAGE தொலைந்துவிட்டால் திரும்பப்பெறுவது எப்படி?

நாடு விட்டு நாடு செல்லும்போது பல்லாயிர கணக்கான பயணிகள் வந்து செல்லும் விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ்கள் தொலைந்துப்போவது வழக்கம். அதில் அதிகப்படியான லக்கேஜ்கள் மீட்கப்பட்டுவிடும். ஒருசில லக்கேஜ்கள் தொலைந்துபோவதற்கு வாய்ப்புண்டு.

லக்கேஜ்கள் அதன் உரிமையாளர் இருக்கும் அதே விமானத்தில் பறக்க, விமான எண் மற்றும் பார்கோடு கொண்ட ஒரு சிறப்பு பேக்கேஜ் டேக் ஒவ்வொரு விமான பயணியின் லக்கேஜிலும் இணைக்கப்படும். அதுபோல போர்டிங் பாஸில் ஸ்டிக்கர் இணைக்கப்படும்.

விமான நிலையத்தில் லக்கேஜ்கள் தொலைந்து போவதற்கு முக்கிய காரணம் அங்கு பணிபுரியும் செக்-இன் ஊழியர்கள் அல்லது லக்கேஜ்களை விநியோகம் மற்றும் ஏற்றுவதில் ஈடுபட்டுள்ள சக ஊழியர்களே.

விமான நிலையத்தில் சாமான்களை தொலைந்துவிட்டால் என்ன செய்வது?

பயணிகள் பீதி அடையாமல், விதிமுறைகளுடன் தொலைந்த லக்கேஜை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதலில் விமான நிலையத்தில் இருக்கும் LOST and FOUND பேக்கேஜ் செண்டரில் தொலைந்த லக்கேஜ் உரிமைகோரலைப் பதிவு செய்யவும். விமான நிலையத்தில் LOST and FOUND கவுண்டர் இல்லை என்றால், விமான நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.

விமான நிறுவனத்தில் பயன்பாடு தனிப்பட்ட தரவு, லக்கேஜின் குறித்த அறிகுறிகளை வழங்க வேண்டும். பெரும்பாலான விமான நிறுவனங்கள் தொலைந்த லக்கேஜ்களை கண்டுபிடித்து வழங்குகின்றன.

பின்னர் விமான நிறுவனத்தில் தொலைந்த லக்கேஜுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஆதாரம் இருக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில், விமான நிறுவனம் லக்கேஜ் தேடலில் ஈடுபடும், இந்த தேடல் 21 நாட்கள் நீடிக்கும். அப்போது லக்கேஜ்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அருகிலுள்ள விமான நிலையம் அல்லது விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.

உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் இழந்த சாமான்களைத் தேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, இழந்த லக்கேஜ்கள் அதிகப்படியாக 2 அல்லது 3 நாட்களுக்குள் அதன் உரிமையாளருக்குத் திருப்பி அனுப்பப்படும்.

லக்கேஜ்கள் கையில் கிடைக்கும் வரை பேக்கேஜ் டேக்கை வைத்திருக்க வேண்டும், பின்னர் லக்கேஜ் கைக்கு வந்தடைந்ததை அடுத்து மூழ்வதுமாக சரிபார்க்கவும்.

தேடலுக்கான கால அளவு:

  • விமானம் தரையிறங்கிய 21 நாட்களுக்கு தொலைந்து போன லக்கேஜ்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்.
  • 22 வது நாளில் லக்கேஜ்கள் கிடைக்காவிட்டால் அதிகாரப்பூர்வமாக இழந்ததாகக் கருதப்படும்.
  • உள்நாட்டு விமானங்களில் தொலைந்த லக்கேஜ்களுக்கான கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு 6 மாதங்கள் காலக்கெடு உள்ளன.
  • சர்வதேச விமானங்களில் தொலைந்த லக்கேஜ்களுக்கான கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு 18 மாதங்கள் காலக்கெடு உள்ளன.
  • சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை 45 நாட்களுக்குள் விமான நிறுவனம் பரிசீலிக்கும். 45 நாட்களுக்கு பிறகு, விமான நிறுவனம் தங்கள் முடிவை எழுத்துப்பூர்வமாக கடிதம் அனுப்பும். கடிதம் வரவில்லை என்றால், வழக்கைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தொலைந்த லக்கேஜ்களுக்கான தொகையை நிர்ணயிக்க பயணிகளுக்கு உரிமை உண்டு.

Related Articles

Back to top button
error: Content is protected !!