அமீரக செய்திகள்

துபாயில் மரணித்த வெளிநாட்டினரை இங்கேயே அடக்கம் செய்ய நடைமுறைகள் என்ன?

வேலைக்காகவும், தொழில் சம்பந்தமாகவும் பல நாடுகளைச் சேர்ந்த பலரும் அமீரகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதில் திடீரென அல்லது நோய்வாய்ப்பட்டு எதிர்பாராத சூழ்நிலையில் மரணிக்கும் நமது உறவினரகள் அல்லது நெருக்கமானவர்களின் மரணம் என்பது நமக்கை மிகுந்த துக்கத்தையும் வேதனையையும் நமக்கு கொடுக்கும்.

அத்தகைய துயரமான நேரத்தில் முறையாக இறுதிச் சடங்குகளை செய்வது இறந்தவர்களுக்கு நாம் செலுத்தும் இறுதி மரியாதையாகும். அவ்வாறு அமீரகத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்தால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு சில அத்தியாவசிய ஆவணங்கள் தேவைப்படுவதுடன் பின்பற்ற வேண்டிய ஒரு கட்டாய நடைமுறைகளும் உள்ளன.

குறிப்பாக, இறந்தவரின் மதம் அல்லது கலாச்சாரத்தின் படி, உடலை தகனம் செய்ய வேண்டியிருந்தால், அதற்கான பல்வேறு வழிகளை வழங்கும் சேவைகளும் நாட்டில் உள்ளன. அதனடிப்படையில், துபாயில் இறந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் பற்றிய விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்

இந்த செயல்முறைக்கு பதிவு செய்வதற்காக, இதற்கான இணையதளத்தில் பல ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். பதிவு செய்வதற்கு முன் நீங்கள் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்

  • இறந்தவரின் பாஸ்போர்ட் நகல் (முதல் மற்றும் கடைசி பக்கம்)
  • இறந்தவரின் விசா நகல்
  • திருமண சான்றிதழ் (திருமணமானவராக இருந்தால்)
  • இறந்தவரின் எமிரேட்ஸ் ஐடி நகல் (இருபுறமும்)
  • DHA ஆல் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்
  • மருத்துவமனையால் வெளியிடப்பட்ட மரண அறிக்கை அல்லது இறப்பு அறிவிப்பு
  • காவல்துறை அனுமதி சான்றிதழ்
  • துபாய் முனிசிபாலிட்டியால் அடக்கம் செய்வதற்கான அனுமதி
  • துபாயில் உள்ள ஜெபல் அலியில் அடக்கம் செய்வதற்கான உறவினரின் NOC கடிதம்
  • விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் நகல் (முதல் பக்கம் மற்றும் கடைசி பக்கம்)
  • விண்ணப்பதாரரின் விசா நகல்
  • விண்ணப்பதாரரின் எமிரேட்ஸ் ஐடி (இருபுறமும்)

பதிவு மற்றும் செலவு:

1. இறுதிச் சடங்கு மேற்கொள்வதற்கான நேரத்தைப் பதிவு செய்ய, நியூ சோனாபூர் தகனக் கூடத்தின் (New Sonapur Crematorium) இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.

2. அங்கு, விண்ணப்பதாரர் முதலில் பதிவுசெய்து ஒரு அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும், அதன் பிறகு அவர்கள் ஒரு பதிவு படிவத்தை பூர்த்தி செய்து, சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

3. துபாய் முனிசிபாலிட்டி கட்டணம் உட்பட துபாயில் தகனம் செய்வதற்கு சுமார் 3,500 திர்ஹம்கள் வரை  செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடக்கம் செய்யும் இடம்:

துபாயில் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான பிரத்யேக இடம் ஜெபல் அலியில் உள்ளது. இறந்தவரின் உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல முடியாத பட்சத்தில், அவர்களை இங்கு மட்டுமே அடக்கம் செய்ய முடியும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!