அமீரக செய்திகள்

UAE: கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்ட காவல்துறை..!!

அமீரகத்தின் கடற்கரையில் குளிப்பது பொதுவாகவே பெரும்பாலான அமீரகவாசிகளுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாகும். இருப்பினும் இரவில் அல்லது அதிகாலையில் கடற்கரையில் குளிப்பது அல்லது நீந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று அபுதாபி காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது.

நீரில் மூழ்குதல் மற்றும் பிற நீச்சல் தொடர்பான விபத்துகளைத் தடுப்பதற்காக மக்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் அபுதாபி காவல்துறை நடத்தியது. இந்த நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள அல் ஹூதைரியாத் கடற்கரை மற்றும் அல் பதீன் கடற்கரையில் நடத்தப்பட்டது.

இந்த பாதுகாப்பு பிரச்சாரத்தில் கடற்கரையில் உள்ள மக்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் அவசர எண்கள் அடங்கிய நோட்டீஸ்களை காவல்துறை விநியோகித்துள்ளது. ஒரு சில சமயங்களில் கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் கடற்கரைக்கு வருபவர்கள் இரவு அல்லது அதிகாலை வேளையில் குளிப்பதை தவிர்க்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடலில் நீந்தும்போது குழந்தைகளை கவனிக்காமல் விட்டுச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்த அவர்கள், கடற்கரைகளில் வழிகாட்டி பலகைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

அபுதாபி காவல்துறையின் ஜெனரல் கமாண்ட், அபுதாபி குடிமைத் தற்காப்பு ஆணையம், நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை மற்றும் முக்கிய துறைகளின் தலைமையின் பங்களிப்புடன் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடற்கரையில் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்தை ஏற்படும் விளைவுகளை தடுப்பதன் நோக்கத்துடன் இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!