அமீரக செய்திகள்

UAE: டிரைவிங் லைசன்ஸ் எடுக்க சிரமப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்…. முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற 12 குறிப்புகள்..!!

அமீரகத்தில் டிரைவிங் லைசன்ஸ் வாங்குவதற்கு முயற்சி செய்பவரா நீங்கள்..?? யாரிடம் கேட்டாலும் ஓட்டுனர் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பல முறை முயற்சிகள் எடுக்க வேண்டும், முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவது மிகவும் அரிதானது என்று கூறுகிறார்களா..?? ஆனால், பதட்டமில்லாத நிதானமும், பயமில்லாமல் ஓட்டும் திறனும் இருந்தால் உங்களால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற முடியும். ஆம், பதட்டம் மற்றும் பயமே சோதனையில் தோல்வியடைவதற்கான முக்கிய காரணிகளாகும்.

இது குறித்து ஓட்டுநர் பயிற்சியாளர்கள் கூறியதாவது, துபாயில் சாலை சோதனையில் (road test) தேர்ச்சி பெறுபவர்களின் விகிதம் சுமார் 50 சதவீதம் ஆகும் என தெரிவித்துள்ளனர். மேலும் பயிற்சியாளர்கள் கூறுகையில், ஏராளமானோர் ஓட்டுநர் சோதனைக்கு விண்ணப்பித்தாலும், அனைவரும் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறுவதில்லை. ஏனென்றால், துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) ஓட்டுநர் உரிமச் சோதனையானது, பயிற்சி பெற்றவர்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு முன்பு அவர்களை முழுமையாக மதிப்பீடு செய்வதாகக் குறிப்பிடுகின்றனர்.

எனவே, சோதனையில் தேர்ச்சி பெற சற்று கடினமானதாக இருக்கலாம், ஆனால் அது சாத்தியமற்றது அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி ஓட்டுநர் தேர்வுக்கு செல்வதற்கு முன்பு உங்களை நீங்களே மனரீதியாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஓட்டுநர் தேர்வில் எளிதாக வெற்றி பெற சில உதவிக் குறிப்புகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை:

  1. வாகனத்தை இயக்குவதற்கு முன், கண்ணாடி மற்றும் இருக்கை சரிசெய்தல் போன்ற அடிப்படை மாற்றங்களை உங்களுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் சரி செய்யவும்.
  2. ஜங்க்‌ஷனின் (junction) இருபுறமும் கண்காணிக்கத் தவறாதீர்கள்.
  3. வலப்புறம் அல்லது இடப்புறமாக கண்காணித்த பிறகு கடந்து செல்லவும்.
  4. உங்கள் கண்ணாடிகளைச் சரிபார்த்து, பாதைகளை மாற்றும்போது எப்போதும் குறிகாட்டிகளைப் (indicators) பயன்படுத்தவும்.
  5. ஒரு ரவுண்டானாவில் இருந்து வெளியேறும் போது, ​​உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்தைப் பின்தொடர்வதற்கு முன் உங்கள் கண்ணாடியை சரிபார்க்கவும்.
  6. ஸ்டீயரிங் வீலை சரியான முறையில் கட்டுப்படுத்தி, உங்கள் கைகளை சரியான நிலையில் வைக்கவும்.
  7. நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தின் பின்னால் இருந்து நீங்கள் நகரும் போது, ​​முதலில் உங்கள் கண்ணாடிகள் மற்றும் குருட்டுப் புள்ளியை (blind spot) சரிபார்க்கவும்.
  8. போக்குவரத்து சிக்னல்களை கடைபிடிக்கவும்.
  9. உங்களுக்கான பாதையில் வாகனத்தை இயக்கவும். சாலையின் கர்ப் (kerb) அல்லது மையத்திற்கு மிக அருகில் வாகனம் ஓட்ட வேண்டாம்.
  10. சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் பிரேக்கை செயல்படுத்த வேண்டும். திடீர் பிரேக்குகளைப் பயன்படுத்துவது சாலை சோதனை தோல்விக்கு வழிவகுக்கும்.
  11. சோதனைக்கு முன் நன்றாக ஓய்வெடுங்கள்.
  12. இறுதியாக, நீங்கள் சாலை சோதனையை மேற்கொள்ளும் போது, ​​நம்பிக்கையுடன் இருங்கள். சாலையில் எப்போதும் விழிப்புடன் இருப்பது அவசியம்.

மேற்கூறிய குறிப்புகளை நிதானமாகக் கடைபிடித்தால், முதல் முயற்சியிலேயே உங்களால் தேர்ச்சி பெற முடியும். தயக்கத்தைத் தகர்த்து ஓட்டுநர் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!