அமீரக செய்திகள்

UAE: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை.. COVID-19 நெறிமுறைகளை அறிவித்த அமீரக அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் வரவுள்ள கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பின்பற்ற வேண்டிய COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளை அமீரக அரசு அறிவித்துள்ளது.

அமீரகத்தின் தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) கடந்த 13 ம் தேதி செவ்வாயன்று தனது வாராந்திர ஊடக சந்திப்பின் போது விடுமுறை கொண்டாட்ட நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.

புதிய நெறிமுறைகளின் படி, நெரிசலான மற்றும் உட்புற பகுதிகளில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்குபெறும் நபர்களின் எண்ணிக்கையை அதன் திறனில் 80 சதவீதமாக அமீரக அரசு குறைத்துள்ளது. மேலும் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு எதிர்மறையான PCR சோதனை வழங்கப்பட வேண்டும் என்பதும், மேலும் நுழைவதற்கு முன் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதும் அந்த நெறிமுறைகளில் அடங்கும்.

விடுமுறையை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாடுவதை உறுதிசெய்யவும், தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்ததற்கான முயற்சிகளைப் பாதுகாக்கவும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொண்டாட்ட நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அவை,

>> நெரிசலான மற்றும் உட்புற இடங்களில் எல்லா நேரங்களிலும் முக கவசங்களை அணிய வேண்டும்.

>> 1.5 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் விதிகளில் அடங்கும். இருப்பினும், குடும்பங்கள் சமூக இடைவெளியைப் பேண வேண்டிய அவசியமின்றி ஒன்றாக உட்காரவோ அல்லது நிற்கவோ அனுமதிக்கப்படுகின்றனர்.

>> தடுப்பூசியை முழுமையாக போட்டுகொண்டு 14 நாட்கள் பூர்த்தியாயிருந்தால், ஒரு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றிருந்தால் அல்லது அவர்களின் அல் ஹோஸ்ன் அப்ளிகேசனில் கிரீன் பாஸ் அந்தஸ்தைப் பெற்றிருந்தால் அனைத்து வயதினரும் நிகழ்வுகளில் அல்லது கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

>> வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது கைகுலுக்கல் அல்லது கட்டியணைக்காமல் தூரத்தில் இருந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும். புகைப்படம் எடுக்கும் போது சமூக இடைவெளியை மதிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!