அமீரக செய்திகள்

அபுதாபி: மவாகிஃப் பார்க்கிங் கட்டணத்தை “Darb” அப்ளிகேஷன் மூலம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்..!!

அபுதாபியில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களின் மவாகிஃப் (Mawaqif) பார்க்கிங் கட்டணத்தை இனி டோல்கேட் அமைப்பான “டார்ப் (Darb)” ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் செலுத்தலாம் என்று அபுதாபியின் பொது போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிவிப்பில், இந்த புதிய கட்டண விருப்பம் வாகன ஓட்டிகளுக்கு வசதியானது மற்றும் நெகிழ்வானது என்றும், தங்களின் டார்ப் இ-வாலட்டை பயன்படுத்தி பார்க்கிங் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

மேலும் ITC கூறுகையில், “பரிவர்த்தனைகளை பாதுகாப்பாகவும், எளிமையாகவும் செயல்படுத்துவதற்கு ITC இன் தொடர்ச்சியான முயற்சிகளின் கட்டமைப்பிற்குள் புதிய ‘Darb’ கட்டணச் சேவை உருவாக்கப்பட்டது, இது சேவைகளை ஒருங்கிணைப்பதற்கும், கட்டணச் சேனல்களை மிகவும் திறமையாக தரப்படுத்துவதற்கும் பங்களிக்கும். இப்போது, ​​டோல் கேட் மற்றும் மவாகிஃப் பார்க்கிங் கட்டணங்களைச் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு ஒரே ஒரு ஒருங்கிணைந்த தளம் மற்றும் ஒரு இ-வாலட் மட்டுமே தேவை” என்றும் பிட்ச் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சேவை வேகமாகவும் எளிதாகவும் உள்ளதாகவும், டார்ப் மொபைல் அப்ளிகேஷனில் உள்ள ‘பார்க்கிங்கிற்கான பணம் செலுத்து’ என்ற ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் ஐடிசி குறிப்பிட்டுள்ளது. அபுதாபியில் உள்ள டார்ப் டோல் கேட் கட்டணத்தை செலுத்துவதற்கு ஏற்கனவே வாகன ஓட்டிகளால் இந்த இ-வாலட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அபுதாபியில் மவாகிஃப் பார்க்கிங் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாகன ஓட்டிகள் பார்க்கிங் இடங்களில் நிறுவப்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ, அல்லது 3009 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ அல்லது 15 திர்ஹம்ஸுக்கு மேல் பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ தங்களின் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை செலுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!