அமீரக செய்திகள்

துபாயில் புதிய மெட்ரோ இணைப்பு பேருந்து சேவை.. RTA அறிவிப்பு..!

துபாயில் ஜூன் 20 முதல் புதிய மெட்ரோ இணைப்புப் பேருந்து சேவை தொடங்குவதாகவும், ‘F57’ ஜெபல் அலி மெட்ரோ நிலையத்தில் இருந்து தொடங்கி, பிஸியான நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ப்ளூ வாட்டர்ஸ் தீவுக்குச் செல்லும் என்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

துபாயில் உள்ள மற்ற 15 பேருந்து வழித்தடங்களான 12, 20, 21, 24, 53, 84, 91A, F15, F26, F30, F33, F47, J01, J02 மற்றும் X22 ஆகிய வழித்தடங்களின் கால அட்டவணைகளையும் ஆணையம் மேம்படுத்தும் என்று RTA-வின் பொதுப் போக்குவரத்து முகமையின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் ஆதில் ஷகேரி தெரிவித்தார்.

கோல்ட் சூக் நிலையத்திலிருந்து தொடங்கி தேராவில் உள்ள சூக் அல் மர்ஃபாவுக்குச் செல்லும் SM1 பாதையில் காலை 10 மணி முதல் பேருந்துக்கள்2 இயக்கப்படுவதாகவும், சூக் அல் மர்ஃபாவிலிருந்து கடைசிப் பயணமாக அதிகாலை 3.27 மணிக்குப் புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொது பேருந்து சேவையைப் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து ஷகேரி தெரிவித்தார். “பிற பொது போக்குவரத்து வழிமுறைகளுடன் இது ஒருங்கிணைக்கப்படுவதால், துபாயில் பேருந்து போக்குவரத்து நியாயமான கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் வாகனங்களை ஓட்டுவதற்கு மாறாக, பயணிகள் தங்கள் இருக்கைகளின் அமர்ந்துக்கொண்டு நகரின் அழகைக்கண்டு மகிழலாம். இவ்வாறு ஆதில் ஷகேரி கூறினார்.

கோடை விடுமுறைகள் நெருங்கி வருவதால், பேருந்து கால அட்டவணையை சரிசெய்தல் மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப புதிய வழித்தடங்களை தொடங்குவதன் மூலம் பொது போக்குவரத்து சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக RTA தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!