அமீரக செய்திகள்

அமீரகத்தில் கொளுத்தும் வெயில்: ஆண்டில் முதன் முறையாக 50°C ஐ தாண்டிய வெப்பநிலை..!!

அமீரகத்தில் அதிகாரப்பூர்வ கோடைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெப்பநிலையானது கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 50°C க்கு நிலவி வந்தது. இதில் கடந்த ஜூன் 21 ம் தேதி முதல் அமீரகத்தில் கோடைகாலம் ஆரம்பித்துள்ளதாகவும் அந்த நாள் வருடத்தின் மிக நீண்ட நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெப்பம் அதிகரித்து வருவதையொட்டி அமீரகத்தில் திறந்தவெளி மற்றும் சூரியனுக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதிய ஓய்வு இடைவேளையை அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று (வியாழன்) முதல் முறையாக வெப்பநிலை 50°C-ஐ தாண்டியதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, நேற்றைய நாளில் நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை அல் தஃப்ரா பிராந்தியத்தின் ஒவ்டைடில் (Owtaid) 50.5 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த வெப்பநிலையானது மதியம் 2.45 மணிக்கு பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டின் மறுமுனையான, ராஸ் அல் கைமாவில் உள்ள ஜபல் மெப்ரே பகுதியானது, நேற்று மிகக் குறைந்த வெப்பநிலையை பதிவு செய்திருக்கிறது. வானிலை மையத்தின்படி நேற்று அதிகாலை 5.15 மணிக்கு 21.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பதிலை பதிவான போதிலும் வியாழன் காலை ஷார்ஜாவின் திப்பா அல் ஹிஸ்னில் லேசான மழை பெய்ததாகவும் NCM தெரிவித்துள்ளது. NCM வெளியிட்ட ஐந்து நாள் வானிலை அறிக்கையின்படி, வெப்பமான வானிலை அடுத்த வாரம் வரை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!