அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

UAE: கடந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு எவ்வளவு கோடி வரவு தெரியுமா..? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்புவெளியிட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்றுவேலை செய்யும் இந்தியர்கள், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு ஒவ்வொருமாதமும் பணம் அனுப்புவது வழக்கம். அவ்வாறு 2021வது ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குள் 87 பில்லியன் டாலர் (ரூ.6.9 லட்சம் கோடி) வரவாகியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய வெளிநாட்டுப் பண வரவில் அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குள் அதிக பணம் வரவாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய அரபு நாடுகள் உள்ளன. இந்த வரிசையில் சீனா, மெக்ஸிகோவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

வெளிநாடுவாழ் சீனர்கள் மூலம் சீனாவுக்குள் 53 பில்லியன் டாலர் பணம் வந்துள்ளது. அதேபோல், மெக்ஸிகோவுக்குள் 53 பில்லியன் டாலர், பிலிப்பைன்ஸுக்குள் 36 பில்லியன் டாலர், எகிப்துக்குள் 33 பில்லியன் டாலர் வரவாகியுள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு இத்தகைய வெளிநாட்டுப் பண வரவு உதவியாக அமைந்ததாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!