வளைகுடா செய்திகள்

தமிழக அரசு கடனை அடைக்க பணம் அனுப்பிய சவுதி வாழ் தமிழர்..!

தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தன் பங்காக, 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். திருச்சி சேர்ந்த சின்னராஜா செல்லதுரை. இவர் 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார்.

அத்துடன், முதல்வர் தனிப்பிரிவுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதம்: நான் சவுதி அரேபியாவில் பொறியாளராக பணிபுரிகிறேன். பொருளாதாரம் படிக்கிறேன். தமிழகத்தின் 2022 – 23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை செய்தியை கண்டேன். அதில், 2023 மார்ச் 31 நிலவரப்படி, தமிழக அரசின் கடன் 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடி. அடுத்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, ஒவ்வொரு தமிழனின் மீதும் உள்ள தமிழக அரசின் கடன், 90 ஆயிரத்து 558 ரூபாய். இதை அறிந்து வருத்தம் அடைந்தேன். கடன் தீர என் பங்களிப்பை செலுத்த முடிவு செய்தேன்.

அதற்காக கடந்த ஆறு மாதத்தில், 90 ஆயிரத்து 558 ரூபாய் சேமித்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன். தமிழக அரசின் கடனை செலுத்த என் பங்களிப்பை பயன்படுத்தவும். தமிழகம் ஒரு குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!