அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

UAE: அபுதாபி விமான நிலைய போக்குவரத்து சேவையில் முதலிடத்தை பிடித்த இந்திய பயணிகள்..!

அபுதாபி விமான நிலையத்தில் முதல் ஆறு மாதங்களில் 6.299 மில்லியன் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு செய்துள்ளதாகவும் அதில் அதிகமானோர் இந்தியர்கள்  என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து அறிக்கையை வெளியிட்ட அபுதாபி ஏர்போர்ட்ஸ், அபுதாபி இன்டர்நேஷனல், அல் ஐன் இன்டர்நேஷனல், அல் பாடீன் எக்ஸிகியூட்டிவ், டெல்மா மற்றும் சர் பானி யாஸ் தீவு விமான நிலையங்களின் ஆபரேட்டர் என விமான நிலைய தொடர்புடைய அனைத்து துறையிலும் ஜனவரி முதல் ஜூன் வரை 94,538 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அபுதாபி விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஷரீஃப் ஹாஷிம் அல் ஹஷ்மி, “பயணிகள் போக்குவரத்து முடிவுகள் அபுதாபி விமான நிலையங்கள் மற்றும் தொழில்துறைக்கு மற்றொரு முன்னேற்றத்தை கொண்டு சென்றுள்ளது. 2021 ஒரு வெற்றிகரமான ஆண்டாக இருந்தாலும், 2022 ஆம் ஆண்டிற்கான இலக்கு வேகத்தை அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம்

2022 முதல் அரை ஆண்டில் விமான நிலைய பயணிகளின் எண்ணிக்கையில் முதல் ஐந்து நாடுகள் பட்டியலில் இந்தியா (1.28 மில்லியன்), பாகிஸ்தான் (485,000), இங்கிலாந்து (374,000), சவுதி அரேபியா (333,000) மற்றும் எகிப்து (283,000) ஆகும். அதுபோல முதல் ஐந்து இலக்கு விமான நிலையங்கள் லண்டன் ஹீத்ரோ (276,000), டெல்லி (225,000), மும்பை (221,000), கொச்சி (217,000) மற்றும் கெய்ரோ (203,000) ஆகும்.

2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 19 விமான நிறுவனங்கள் 74 இடங்களுக்குச் சேவை செய்திருந்த நிலையில், 22 விமான நிறுவனங்களால் 104 இடங்களுக்கு விமான நிலையம் இணைக்கப்பட்டது. இரண்டாவது காலாண்டில் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையில் முதல் ஐந்து நாடுகள் இந்தியா (764,000), பாகிஸ்தான் (231,000), இங்கிலாந்து (203,000), சவுதி அரேபியா (195,000) மற்றும் எகிப்து (156,000) ஆகும். முதல் ஐந்து இலக்கு விமான நிலையங்கள் லண்டன் ஹீத்ரோ (153,000), மும்பை (146,000), கொச்சி (126,000), டெல்லி (123,000) மற்றும் கெய்ரோ (114,000).

Related Articles

Back to top button
error: Content is protected !!