அமீரக செய்திகள்

UAE: கடுமையான மூடுபனியின் போது வாகன ஓட்டிகள் பின்பற்றக்கூடிய முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்..!

அமீரகத்தில் வாகன ஓட்டிகளுக்கு மூடுபனி காரணமாக பார்வைத்திறன் குறைந்துள்ளதால் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் வேக வரம்புகளின் படி வாகனத்தை ஓட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மூடுபனி எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அபுதாபி காவல்துறை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஓட்டுநர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குறைந்த தெரிவுநிலையின் போது பின்பற்றக்கூடிய சில முக்கியமான வழிமுறைகள் குறித்து தெரிவித்துள்ளது.

  • மூடுபனி பரவினால், உங்கள் FOG விளக்குகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்களுக்கும் மற்ற வாகனங்களுக்கும் இடையிலான பாதுகாப்பு தூரத்தை இரட்டிப்பாக்கவும்.
  • உங்களது பாதையிலேயே செல்லவும் மற்றும்  திசைதிருப்பக்கூடிய எதையும் செய்ய வேண்டாம்.
  • சாலையில் யாரும் இல்லை என்று கருதி சரிபார்க்காமல் முந்திச் செல்வதையோ பாதைகளை மாற்றுவதையோ தவிர்க்கவும்.
  • மிகவும் அடர்த்தியான மூடுபனியில், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி, உங்கள் அபாய விளக்குகளை இயக்கவும்.

அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளை வானிலை நிலைமைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், பலகைகள் மற்றும் மின்னணு பலகைகளில் காட்டாப்படும் வேக வரம்புகளை கவனத்தில் கொள்ளுமாறும் எச்சரித்துள்ளது.

மூடுபனி உருவாக்கம், மோசமான தெரிவுநிலை குறித்து NCM எச்சரித்துள்ளது.
மூடுபனி மற்றும் குறைந்த தெரிவுநிலை காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், போக்குவரத்து விதிமுறைகளையும் பின்பற்றுமாறு சாலையைப் பயன்படுத்துவோர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!