அமீரக செய்திகள்

இந்த வாரம் முதல் துவங்கும் “Dubai Fitness Challenge”.. குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் துபாய் இளவரசர்..!!

துபாயில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (DFC) இந்த வார இறுதியில் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் நடைபெறவுள்ள துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சிற்கு துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் அனைத்து ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களையும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு துபாயை உலகின் மிகவும் சுறுசுறுப்பான நகரமாக மாற்ற உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த 30×30 சேலஞ்சின் 6வது பதிப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள துபாய் இளவரசர் இது பற்றி அவர் கூறுகையில், “உலகின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆற்றல்மிக்க நகரமாக துபாயை மாற்ற முழு சமூகமும் ஒன்றிணைவதை நான் எதிர்நோக்குகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த வார இறுதியில் துவங்கவிருக்கும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சிற்கான இந்த ஆண்டு பதிப்பிற்கான நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளின் நீண்ட பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மாத காலம் நடைபெறும் இந்த நிகழ்வானது அக்டோபர் 29 முதல் நவம்பர் 27 வரை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 இல் முதன்முதலாக தொடங்கப்பட்ட DFC, துபாய் குடியிருப்பாளர்களை 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 30 நிமிட உடற்பயிற்சி சம்பந்தமான செயல்பாடுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது மற்றும் முழு நகரத்தையும் ஒரு உடற்பயிற்சி மையமாக மாற்ற உதவுகிறது. அதில் கடந்த ஆண்டு, DFC பதிப்பானது இதுவரை இல்லாத அளவிற்கு 1.65 மில்லியன் மக்களின் பங்கேற்பைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் முக்கிய சாலையான ஷேக் சையத் சாலையை சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்களுக்கான பாதையாக மாற்றும் துபாய் ரன் (Dubai Run) மற்றும் துபாய் ரைடு (Dubai Ride) போன்றவை இந்த ஆண்டும் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு DFC-யில் இடம்பெறும் நிகழ்வுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை

  • 2 ஃபிட்னஸ் வில்லேஜஸ்
  • 19 ஃபிட்னஸ் ஹப்
  • துபாய் ரைடு – நவம்பர் 6
  • துபாய் ரன்- நவம்பர் 20
  • 30 நாள் பேடல் ப்ரோகிராம் (Padel Programme)
  • 30 நாள் ஃபுட்பால் ப்ரோகிராம்

துபாய் ரைடு (Dubai Ride)

துபாய் ரைடு வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஷேக் சையத் சாலையில் 12-கிமீ பயணம்; ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டில் 4-கிமீ பாதை பயணம் என பயணிக்க வேண்டிய இரண்டு வழிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளன.

MOTF, சத்வா, கோகோ கோலா அரங்கம், லோயர் ஃபினான்சியல் சென்டர் ரோட் மற்றும் பிஸ்னஸ் பே உள்ளிட்ட சாலைகளை இது உள்ளடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.dubairide.com இல் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ரன் (Dubai Run)

துபாய் ரன் வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 10 கிமீ மற்றும் 5 கிமீ என்ற இரண்டு தூர அளவில் வழித்தடங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க www.dubairun.com என்ற வலைதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பேடல் சாம்பியன்ஷிப் (World Padel Championship)

உலக பேடல் சாம்பியன்ஷிப் (World Padel Championship) DFC-யின் ஒரு பகுதியாக முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவுள்ளது. 5,000 இருக்கைகள் கொண்ட துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் மைதானத்தில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 5 வரை இது நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் DFC-யின் இரண்டு ஃபிட்னஸ் வில்லேஜஸ் இந்த ஆண்டும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

DP வேர்ல்ட் கைட் பீச் ஃபிட்னஸ் வில்லேஜ் (DP World Kite Beach Fitness Village)

திறக்கும் நேரம்:

திங்கள்-வெள்ளி : மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை

சனி-ஞாயிறு : காலை 7 மணி முதல் 11 மணி வரை

இந்த வில்லேஜில் உள்ள இடங்கள்:

  • Aqua Park
  • The Ring
  • Aviv Row- Ride- Jab
  • Etisalat by E& Base Main Stage
  • Fitbit- Core- Lift- Rebounder
  • Emirates NBD Cricket Arena
  • The Box by Nissan
  • Multi-purpose Court
  • Lipton Tone
  • Emirates Padel Court
  • Children’s Play Area

RTA லாஸ்ட் எக்ஸிட் ஃபிட்னஸ் வில்லேஜ் (RTA Last Exit Fitness Village)

திறக்கும் நேரம்:

திங்கள் – வெள்ளி : மாலை 4 மணி முதல் அரவு 11 மணி வரை

சனி-ஞாயிறு : மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

இந்த வில்லேஜில் உள்ள இடங்கள்:

கடந்த ஆண்டு 14 ஹப்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, DFC-யில் மொத்தம் 19 ஃபிட்னஸ் சென்டர் இருக்கும். அவை

  • Dragon Mart
  • Dubai International Financial Center (DIFC)
  • Zabeel Sports District
  • Mohammed Bin Rashid Library
  • Sport Society
  • Dubai Silicon Oasis
  • Hatta
  • Dubai Design District
  • Champs Sports and Fitness Club
  • The Beach
  • Bluewaters
  • Dubai Multi Commodities Center
  • Palm Jumeirah
  • Dubai Sports City
  • The Space
  • Zabeel Ladies Club
  • Dubai Police Officers Club
  • Dubai Hills Mall
  • Dubai Festival City Mall

அனைத்து உடற்பயிற்சி மையங்களுக்கான தேதிகள் DFC இணையதளத்தில் https://www.dubaifitnesschallenge.com/ இல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஃபிட்னஸ் வீக் எண்ட் (Fitness Weekend)

நவம்பர் 12-13 தேதிகளில் எக்ஸ்போ சிட்டியில் இது நடைபெறும். இந்த நடவடிக்கையானது 5 இடங்களில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அவை:

  • அல் வாசல் டோம் (Al Wasl Dome)
  • ஜூபிலி பார்க் (Jubilee Park)
  • சர்ரியல் வாட்டர் ஃபீச்சர் (Surreal Water Feature)
  • கார்டன் இன் தி ஸ்கை (Garden In The Sky)
  • அல் ஃபோர்சன் பார்க் (Al Forsan Park)

இதில் இடம்பெறும் சில செயல்பாடுகள்:

  • 3 கிமீ, 5 கிமீ, 10 கிமீ அல்லது 15 கிமீ தூரத்தில் எக்ஸ்போ சிட்டி ரன்
  • 12 கிமீ, 18 கிமீ, 40 கிமீ மற்றும் 74 கிமீ தூரத்தில் எக்ஸ்போ சிட்டி ரைடு
  • ஏசி மிலன் ஃபுட்பால் அகாடமி
  • யோகா அமர்வுகள்
  • ஸ்பின்னிங்
  • ஜிம்னாஸ்டிக்ஸ்
  • ஜூம்பா
  • உலகின் மிகப்பெரிய டிராம்போலைன் ஃபிட்னஸ் செஷன்

கடந்த ஆண்டு, DFC 1.65 மில்லியன் மக்களின் பங்கேற்பைக் கண்டு சாதனை படைத்ததை முன்னிட்டு இந்த ஆண்டு எண்ணிக்கையானது அதை விட அதிகமாக இருக்கும் என்று துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் காஜா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற DFC-யில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை

  • 2017 ம் ஆண்டு — 786,000 பங்கேற்பாளர்கள்
  • 2018 ம் ஆண்டு — 1,000,000 பங்கேற்பாளர்கள்
  • 2019 ம் ஆண்டு — 1,100,000 பங்கேற்பாளர்கள்
  • 2020 ம் ஆண்டு — 1,500,000 பங்கேற்பாளர்கள்
  • 2021 ம் ஆண்டு — 1,650,000 பங்கேற்பாளர்கள்

 

Related Articles

Back to top button
error: Content is protected !!