அமீரக செய்திகள்

சென்னையில் இருக்கும் ஆய்வகம் உட்பட மூன்று ஆய்வகங்களில் இருந்து பெறப்படும் கொரோனா சோதனை முடிவுகள் ஏற்கப்படாது..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

இந்தியாவில் இருந்து துபாய் வரும் பயணிகளில், பயணத்திற்கு முன் மேற்கொள்ளப்படும் கொரோனாவிற்கான சோதனை முடிவுகளில் குறிப்பிட்ட ஏழு ஆய்வகங்களில் இருந்து பெறப்பட்ட கொரோனா சோதனை முடிவுகளானது இனி துபாயில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம், இதே போன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஃப்ளைதுபாய் விமான நிறுவனங்களானது இந்தியாவில் இருக்கும் நான்கு ஆய்வகங்களிலிருந்து சோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஏற்கெனவே அறிவித்திருந்தன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நான்கு ஆய்வகங்களானது ஜெய்ப்பூர், டெல்லி மற்றும் கேரளாவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அக்டோபர் 26 திங்கள் அன்று மேலும் மூன்று ஆய்வகங்களில் இருந்து பெறப்படும் சோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் Aza Diagnostic Centre, 360 Diagnostic and Health Services மற்றும் Aara Clinical Laboratories ஆகியமூன்று ஆய்வகங்களில் இருந்து பெறப்படும் சோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளன. புதிதாக அறிவிக்கப்பட்ட ஆய்வகங்கள் முறையே கேரளாவின் கோழிக்கோடு, டெல்லியில் நொய்டா மற்றும் தமிழ்நாட்டின் சென்னை ஆகிய இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பட்ஜெட் கேரியர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது வலைப்பதிவில் பயணிகளுக்கு purehealth நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து பயணத்திற்கு முந்தைய RT-PCR அறிக்கைகளைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பயணத்திற்கு முந்தைய RT-PCR விதிமுறைகள்:

  • 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளுக்கு, அச்சிடப்பட்ட வடிவத்தில் (printed form) செல்லுபடியாகும் எதிர்மறை கோவிட் -19 RT-PCR சோதனை அறிக்கை தேவை.
  • பயணிகள் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்கு மிகாமல் கொரோனாவிற்கான RT -PCR சோதனை எடுக்க வேண்டும்.
  • கொரோனா சோதனைக்காக விதிக்கப்பட்டிருக்கும் 96 மணி நேர கால அளவானது ஆய்வகத்தில் மாதிரியை கொடுத்த நேரத்திலிருந்து தொடங்குகிறது.
  • மிதமான அல்லது கடுமையான ஊனமுற்ற பயணிகளுக்கு துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணிப்பதற்கான கோவிட் -19 RT-PCR சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • ஷார்ஜாவுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு, SMS மூலமாகவோ அல்லது AlHosn மொபைல் ஸ்மார்ட் ஆப் மூலமாகவோ பெறப்பட்ட அறிவிப்பும் (Virtual Notification) ஏற்கத்தக்கது.
  • துபாய்க்கு பயணிக்கும் பயணிகளுக்கு, கோவிட் -19 RT-PCR எதிர்மறை சோதனை அறிக்கை purehealth நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து பெறப்பட வேண்டும். அதன் விவரங்கள் screening.purehealth.ae என்ற வலைதளத்தில் சென்று காணலாம்.
  • சோதனை முடிவின் அறிக்கையானது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அந்த அறிக்கையானது ஆய்வகம் அல்லது சுகாதார நிறுவனத்தின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் விவரங்களுடன் ஒரு சுகாதார வழங்குநரால் கையொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட வேண்டும்.
  • சேதமடைந்த அறிக்கைகளானது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!