வளைகுடா செய்திகள்

பனிப்பிரதேசமாக மாறிய பாலைவனம்..!! சவூதி அரேபியாவில் ஏற்பட்ட மாற்றம்..!!

வளைகுடா நாடுகள் முழுவதும் தற்பொழுது குளிர்காலம் ஆரம்பித்து வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. மேலும் ஆங்காங்கே கனமழை பெய்தும் வெள்ளம் ஏற்பட்டும் வருகிறது. இந்த நிலையில் பாலைவன பூமியான சவூதி அரேபியாவானது குளிர்காலத்தை முன்னிட்டு பனிப்பிரதேசமாக மாறி காட்சியளிக்கின்றது.

சவூதி அரேபியாவில் கடந்த சில நாட்களாகவே அதிகளவு கனமழை பெய்து அவ்வப்போது வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதில் தற்பொழுது குளிர்காலத்தை முன்னிட்டு பாலைவனங்களில் வெப்பநிலை குறைந்துள்ளதால் சவூதியில் இருக்கும் தபூக்கில் பனி பொழிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளன. மேலும் வெப்பநிலை குறைந்ததால் அங்குள்ள மலைகளை பனி சூழ்ந்து அப்பகுதியை முற்றிலும் வெண்மையாக மாற்றியுள்ளது.

தபூக்கில் உள்ள அல்-லாஸ் பகுதியின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை 1:00 மணியளவில் இந்த பனிப்பொழிவு தொடங்கியது என்று சவூதியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் (SPA) செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

சவூதியில் இருக்கும் ஜோர்டான் எல்லைக்கு அருகில் உள்ள இப்பகுதியில் பனி சூழ்ந்ததையடுத்து இந்த பனியைக் காண பார்வையாளர்கள் தொடர்ந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!