அமீரக செய்திகள்

இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு அமீரக தலைவர்கள் இரங்கல்..!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் காலமானார். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 96 வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

இந்நிலையில் எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அமீரக அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பத்தினருக்கும், இங்கிலாந்து மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். ராணி “அமீரகத்தின் நெருங்கிய தோழி” என்று அழைத்த அவர், அன்பான மற்றும் மரியாதைக்குரிய தலைவர் ஆவார். அவரது நீண்ட கால ஆட்சியில் நாட்டுக்காக அயராது சேவை செய்தார்” என்று கூறியுள்ளார்.

அதுபோல அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், எலிசபெத் மகாராணி அவரது தேசத்திற்கும் மக்களுக்கும் சிறந்த குணங்களைப் வெளிக்காட்டி உலகளாவிய அடையாளமாக திகழ்ந்தார். அவரது சேவை நவீன உலகில் இணையற்றது” என்று கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!