அமீரக செய்திகள்

துபாயின் முக்கிய சாலைகளில் இன்று கால தாமதம் ஏற்படும்.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த RTA..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பிங்க் கேரவன் ரைடு நடைபெறுவதன் காரணமாக துபாய் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் காம தாமதங்கள் ஏற்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ட்வீட்களின்படி, பிப்ரவரி 5, ஞாயிற்றுக்கிழமை காலை 11:15 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை, தி பிங்க் கேரவன் ரைடு காரணமாக, கிங் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் ஸ்ட்ரீட், தி வாக் அட் JBR போன்ற பகுதிகளில் தாமதங்கள் ஏற்படும் என்றும் சாலைகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து RTA வெளியிட்டுள்ள ட்வீட்டில் “தி சிட்டி வாக் (அல் முல்தகா ஸ்ட்ரீட், அல் என்ஜாஸ் ஸ்ட்ரீட், ஹேப்பினஸ் ஸ்ட்ரீட், & அல் மதீனா ஸ்ட்ரீட்) அருகிலுள்ள ஸ்ட்ரீட்களில் பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. உங்கள் பயணத்தைத் திட்டமிட்டு, சரியான நேரத்தில் சென்றடைய முன்கூட்டியே புறப்படுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளது.

வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே தொடங்கவும், தாமதங்களைத் தவிர்க்கும் வகையில் தங்கள் இடங்களை அடைய மாற்று சாலைகளைப் பயன்படுத்தவும் RTA அறிவுறுத்தியுள்ளது. RTA வெளியிட்டுள்ள தகவலின் படி, சாலை மூடல்கள் மூன்று கட்டங்களில் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

முதல் கட்டம்:

காலை 8:00 மணி – 10:30 மணி வரை

பாதிக்கப்படும் சாலைகள்: அல் சுகூக் ஸ்ட்ரீட், அல் போர்சா ஸ்ட்ரீட், அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட், ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டு, & அல் யமாமா ஸ்ட்ரீட்.

இரண்டாம் கட்டம்:

காலை 11:15 மணி – 1:00 மணி வரை

கிங் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஸ்ட்ரீட், & தி வாக் அட் JBR.

மூன்றாம் கட்டம்:

மாலை 3:00 மணி-4:00 மணி வரை

அல் முல்தகா 1 ஸ்ட்ரீட், அல் என்ஜாஸ் ஸ்ட்ரீட், ஹேப்பினஸ் ஸ்ட்ரீட, & அல் மதீனா ஸ்ட்ரீட். சிட்டி வாக் (அல் முல்தகா ஸ்ட்ரீட், அல் என்ஜாஸ் ஸ்ட்ரீட், ஹேப்பினஸ் ஸ்ட்ரீட், & அல் மதீனா ஸ்ட்ரீட்) அருகில் உள்ள ஸ்ட்ரீட்கள் மூடப்படும்.

பிங்க் கேரவன் ரைடு என்பது பிப்ரவரி 4 முதல் 10 வரை அமீரகத்தின் ஏழு எமிரேட்ஸ் முழுவதும் பயணித்து மார்பகப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் நோயைச் சமாளிக்க முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் வழங்குகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!