அமீரக செய்திகள்

துபாய்: பார்க்கிங் கட்டண நேரம், மெட்ரோ, டிராம், வாடிக்கையாளர் சேவை மையம் செயல்படும் நேரங்களில் மாற்றங்களை அறிவித்துள்ள RTA..!!

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் போது அமீரகம் பல்வேறு மாற்றங்களை காணும். அதே போல் இந்த வருடமும் அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு பல்வேறு செயல்பாடுகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவலுக்குப் பின் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் எதிர்கொள்ளவிருக்கும் முதல் ரமலான் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரமலானை முன்னிட்டு வாகன பார்க்கிங் கட்டண நேரங்களில் ஒவ்வொரு எமிரேட்டும் நேர மாற்றங்களை அறிவித்து வருகின்றன. அதில் ஒன்றாக தற்பொழுது துபாய் எமிரேட்டும் பார்க்கிங் நேரங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது துபாயில் கட்டணம் செலுத்தி பார்க்கிங் செய்யக்கூடிய நேரத்தை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் பொது பார்க்கிங் கட்டணம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. TECOM பகுதியில் (F குறியீடு கொண்ட பார்க்கிங்) பார்க்கிங் கட்டணம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொருந்தும் என்றும் அதே நேரத்தில் மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்கள் 24 மணி நேர அமைப்பில் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டண பார்க்கிங் நேரம் மட்டுமல்லாது RTA தனது அனைத்து சேவைகளின் செயல்பாட்டு நேரங்களிலும் மாற்றங்களை அறிவித்துள்ளது.

பொது போக்குவரத்து

துபாய் மெட்ரோ

துபாய் மெட்ரோ ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் மெட்ரோ காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்றும் சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

துபாய் டிராம்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை டிராம் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள் காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை மையங்கள்

இந்த மையங்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்  வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் சேவைகளை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. உம் ரமூல், அல் மனாரா, தேரா, அல் பர்ஷா மற்றும் RTA தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள ஸ்மார்ட் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் வழக்கம் போல் 24 மணி நேரமும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனை மையங்கள்

>> தஸ்ஜீல் ஜெபல் அலி: திங்கள் முதல் வியாழன் வரை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.

>> ஹத்தா: திங்கள் முதல் வியாழன் வரை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் இயங்கும்.

>> அல் முதகமேலா அல் கூஸ், வாசல் அல் ஜதாஃப், நாத் அல் ஹமர், தமாம் அல் கிண்டி, கார்ஸ் அல் மம்சார், கார்ஸ் தேரா, தஸ்ஜீல் டிஸ்கவரி, அல் அவீர், ஆட்டோப்ரோ அல் சத்வா, ஆட்டோப்ரோ அல் மன்கூல், தஸ்ஜீல் அல் தவார்: திங்கள் முதல் வியாழன் வரை மற்றும் சனிக்கிழமைகளில்  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்றும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் செயல்படும். வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி மற்றும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் செயல்படும்.

>> தஸ்ஜீல் அல் குசைஸ், தஸ்ஜீல் அல் பர்ஷா, தஸ்ஜீல் அல் வர்ஸன்: திங்கள் முதல் வியாழன் மற்றும் சனிக்கிழம காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை; வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்கும்.

>> ஷமில் அல் அதெத், ஷமில் முஹைஸ்னா, ஷமில் நாட் அல் ஹமர், ஷமில் அல் குசைஸ், தஜ்தீத், வஸல் அல் அரபி மையம், அல் முமாயாஸ் அல் பர்ஷா, அல் முமாயாஸ் அல் மிசார், தஸ்ஜீல் மோட்டார் சிட்டி, தஸ்ஜீல் அரேபியன் சிட்டி, அல் யாலேஸ், அல் முதகமேலா, அல் அவீர் அண்ட் குயிக்: திங்கள் முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமை, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், அடுத்து இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் இருக்கும். வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் செயல்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!