அமீரக செய்திகள்

அமீரகத்தின் அனைத்து எமிரேட்டுகளிலும் நோன்பு பெருநாளுக்கான தொழுகை நேரம் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழுவானது குடியிருப்பாளர்களை இன்று பிறை பார்க்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில், இன்று பிறை பார்க்கப்பட்டதாக அமீரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளானது நாளை (ஏப்ரல் 21, வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் இன்று வியாழக்கிழமை ஏப்ரல் 20, ரமலான் மாதத்தின் கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமீரகம் முழுவதும் ஈத் பண்டிகை நாளின் காலை வேளையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கான நேரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட அனைத்து எமிரேட்களில் ஈத் சிறப்பு தொழுகை நடத்தப்படும் நேரத்தை கீழே காணலாம்.

  • அபுதாபி: காலை 6.12 மணி
  • அல் அய்ன்: காலை 6.06
  • துபாய்: காலை 6.10 மணி
  • ஷார்ஜா: காலை 6.07 மணி
  • அஜ்மான்: காலை 6.07 மணி
  • ராஸ் அல் கைமா: காலை 6.05 மணி
  • உம் அல் குவைன்: காலை 6.07 மணி
  • ஃபுஜைரா: காலை 6.05 மணி
  • கொர்ஃபக்கன்: காலை 6.05 மணி
  • அல் தைத்: காலை 6.06 மணி
  • மடம் மற்றும் மலிஹா: காலை 6.07 மணி

அமீரகத்தை பொறுத்தவரை நாட்டில் வசிப்பவர்கள் ஈத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை இன்று வியாழக்கிழமை முதல் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!