வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியா: வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக வேலை விசா.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி.?

சவுதி அரேபியாவில் வேலை செய்ய விருப்பமா? முயற்சி செய்தும் உங்கள் திறமை மற்றும் தகுதிக்கேற்ற முழுநேர வேலை கிடைக்கவில்லையா? இந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபியா தற்காலிக வேலை விசாவை அறிமுகப்படுத்திய பிறகு, தற்காலிகமாக வேலை செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்காலிக வேலை விசா என்றால் என்ன?

சவுதி அரேபியாவில் பணிபுரிய தற்காலிக வேலை விசா வழங்கப்படுகிறது, இந்த விசா மூலம் சவுதி அரேபியாவில் நுழைந்த தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு வேலை செய்யலாம். மேலும், ஆறுமாதங்கள் வரை பணிபுரிய அனுமதிக்கும் அதே காலகட்டத்திற்கு அனுமதி நீட்டிக்கப்படலாம். குறிப்பாக, நிறுவனம் வேலை செய்யும் காலத்திற்கான தனி பணி அனுமதி மற்றும் ரெசிடென்ஸ் அனுமதியை வழங்க வேண்டிய அவசியமில்லை.

எலெக்ட்ரானிக் முறையில் வழங்கப்படும் இந்த விசா வழங்கப்பட்ட நேரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிவா பிளாட்பார்ம் (Qiwa Platform):

புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிவா தளத்தில் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தொடர்பான சேவைகளை அணுகலாம். இந்த தளம் சவூதி அரேபியாவில் உள்ள முதலாளிகள் பணியாளர் ஒப்பந்தங்களை டிஜிட்டல் முறையில் உருவாக்கவும் அங்கீகரிக்கவும் அனுமதிக்கும்.

கிவாவில் கணக்கை உருவாக்கிக் கொள்வதன் மூலம் ஊழியர்கள் தங்கள் ஒப்பந்தத்தில் மாற்றங்களை அங்கீகரிக்க, நிராகரிக்க அல்லது கோருவதற்கு இந்த தளம் அனுமதிக்கிறது. இந்த தளத்தில் அரபு, ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தகலோக் மற்றும் உருது ஆகிய ஆறு மொழி தேர்வுகள் இருப்பதால், மொழி ஒரு தடையாக இருக்காது.

விசாவிற்கு விண்ணப்பிக்கும் முறை:

முதலில் கிவா தளத்தில் கணக்கை உருவாக்கிக் கொண்டு, பின்னர் நிறுவனங்கள் அவற்றின் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். எப்படியானாலும், நிறுவனங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால், நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தற்காலிக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்:

  1. நீங்கள் உருவாக்கிய கணக்கில் உள்நுழைந்து, இ-சேவைகளில் இருந்து ‘temporary work visa service’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. அதன்பிறகு, submit temporary work visa request என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அடுத்தபடியாக, கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பவும்.
  4. இறுதியாக, தற்காலிக வேலை விசாவுக்கான கோரிக்கையை சமர்ப்பிக்கவும். விசாவிற்கு சவுதி ரியால் 1,000 (Dh978.97) செலவாகும் மற்றும் உடனடியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!