அமீரக செய்திகள்

UAE: அனைத்து கொரோனா மையங்களையும் நிரந்தரமாக மூடும் SEHA..

அபுதாபியில் இருக்கக்கூடிய அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA) டிசம்பர் 31, 2022 (இன்று) முதல் அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் உள்ள அனைத்து சேஹா கொரோனா மையங்களையும் நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்த மூடலைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் சேஹா ஹெல்த்கேர் மையங்களில் வழங்கப்படும் என்றும் நேர்மறை முடிவைப் பெற்றவர்கள் ரஹ்பா மற்றும் அல் அய்ன் மருத்துவமனைகளில் அடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பாக தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில் முக்கிய பங்கு வகித்த சேஹா (SEHA) நாட்டில் நோய்த்தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியதிலிருந்து, கொரோனா அல்லாத மருத்துவ சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்த மையங்கள் மூடப்பட்ட போதிலும் அபுதாபியில் கொரோனா தொடர்பான சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்று அபுதாபி சுகாதாரத் துறை (DoH) உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி அபுதாபியில் உள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் உட்பட பல்வேறு சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் மற்றும் PCR சோதனைகள் தொடர்ந்து கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!