அமீரக செய்திகள்

வாகன ஓட்டிகளின் வேகத்தைக் குறைக்க உதவும் ஸ்மார்ட் ஸ்பீட் லிமிட் சிக்னல்!! அபுதாபியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கை…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள நெடுஞ்சாலைகள் முழுவதும் புதிதாக சாலை எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டுள்ள நிலையில், இப்போது அபுதாபியில் இருக்கும் ஒரு சுற்றுலா தலத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ள ஒரு எமோஜியுடன் கூடிய ஸ்மார்ட் ட்ராஃபிக் சிக்னல்களும் தற்போது அபுதாபி குடியிருப்பாளர்களை கவர்ந்துள்ளது.

அபுதாபியின் மார்சா மினா பகுதியை நோக்கி பயணிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்மார்ட் டிராஃபிக் சிக்னல்களில் 60 கிமீ வேக வரம்பிற்குள் செல்லும்போது பச்சை நிற சிரிக்கும் எமோஜியையும், வேக வரம்பை மீறினால் முகம் சுளிக்கும் எமோஜியையும் காணலாம். இந்த ஸ்மார்ட் சிக்னல் அமைப்பு வேக வரம்பைத் தாண்டும் வாகனத்தை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் மெதுவாக செல்ல ஊக்குவிக்கிறது.

இந்த எமோஜி குறித்து அல் மினாவுக்கு அடிக்கடி வரும் வாகன ஓட்டிகள் கூறுகையில், சில மாதங்களாகவே நடைமுறையில் உள்ள இந்த ஸ்மார்ட் ட்ராஃபிக் லைட் அமைப்பில், 60 கிமீக்கு மேல் வேகத்தில் செல்லும் போது சிவப்பு நிறத்தில் கோபமான எமோஜி ஒளிருவதை கண்டவுடன் உடனே தங்களின் வாகனத்தை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் ஓட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இதுபோன்ற புதுமையான யோசனைகள் நாட்டின் மற்ற சில எமிரேட்டுகளிலும் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஷார்ஜாவிலும் இதுபோன்ற எமோஜியுடன் வேகத்தை காட்டும் வேக வரம்பு பலகைகள் புதிதாக நிறுவப்பட்டு தற்போது பள்ளிகள் இயங்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள சாலைகளில் பயண்பாட்டில் இருந்து வருகிறது.

இதுதவிர, அபுதாபி காவல்துறை எமிரேட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் முழுவதும் புதிதாக சாலை எச்சரிக்கை அமைப்பை அறிமுகம் செய்தது, இது வண்ண விளக்குகள் மூலம் சாலையில் அடுத்து வரவிருக்கும் போக்குவரத்து நிகழ்வுகள் மற்றும் வானிலை குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியை பொறுத்தவரை சாலை பாதுகாப்பை மேம்படுத்த உள்ளூர் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் மற்றும் வேகமாக ஓட்டுதல், டெய்ல் கேட்டிங் மற்றும் பாதசாரிகளுக்கான இடமில்லாமல் சாலையின் குறுக்கே பாதசாரிகள் செல்லுதல் ஆகியவற்றின் ஆபத்துகளை எடுத்துக்காட்டும் தகவல் வீடியோக்களையும் சமூக ஊடக தளங்களில் பகிர்வதன் மூலம் அபுதாபி காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!