அமீரக செய்திகள்

துபாய்: ஏலத்தில் ரூ.70 கோடிக்கு விற்கப்பட்ட கார் நம்பர் பிளேட்..!! ரூ.10 கோடிக்கு விற்கப்பட்ட மொபைல் நம்பர்..!!

துபாயில் ஒற்றை இலக்கம் கொண்ட வாகன பதிவு எண்களை ஏலத்தில் விட்டு அதனை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்வது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறு நேற்று துபாயில் ‘மோஸ்ட் நோபல் நம்பர்ஸ்’ என்ற அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட சிறப்பு வாகன பதிவு எண்கள் மற்றும் பிரத்யேக மொபைல் எண்கள் மீதான ஏலத்தில் AA8 என்ற வாகன பதிவு எண் 35 மில்லியன் திர்ஹம்ஸிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகின் மூன்றாவது விலையுயர்ந்த வாகன பதிவு எண் என்ற புதிய சாதனையையும் AA8 என்ற இந்த என்ற துபாய் கார் பிளேட் நம்பர் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஏலத்தில் AA9 என்ற ஒற்றை இழக்க எண்ணானது 38 மில்லியன் திர்ஹம்ஸிற்கு விற்கப்பட்டு சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தவிர நேற்று நடைபெற்ற ஏலத்தில், இரட்டை இலக்கம் கொண்ட துபாய் கார் நம்பர் பிளேட் ஆன F55 என்ற எண் 4 மில்லியன் திர்ஹம்ஸிற்கும், V66 என்ற எண்ணானது 4 மில்லியன் திர்ஹம்ஸிற்கும், Y66 என்ற எண் 3.8 மில்லியன் திர்ஹம்ஸிற்கும் விற்கப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன பதிவு எண்களை தவிர Etisalat மற்றும் du வின் பிரத்யேக மொபைல் எண்கள் மீதான ஏலத்திலும் குறிப்பிட்ட மொபைல் நம்பர்கள் பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. எடிசலாட்டின் டயமண்ட்+ மொபைல் எண் 0549999999 ஆனது 5 மில்லியன் திர்ஹம்ஸிற்கும், டயமண்ட் எண்கள் 0565566666 என்ற எண் 160,000 திர்ஹம்ஸிற்கும், 0569999995 ஆனது 150,000 திர்ஹம்ஸிற்கும், 0569199999 என்ற எண் 75,000 திர்ஹம்ஸிற்கும் மற்றும் 0569999955 என்ற எண் 35,000 திர்ஹம்ஸிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று du மொபைல் ஆபரேட்டர் நிறுவனத்தின் பிரத்யேக மொபைல் எண்கள் 0586333333 ஆனது 200,000 திர்ஹம்ஸிற்கும், 0581333333 ஆனது 145,000 திர்ஹம்ஸிற்கும், 0581111113 மற்றும் 0589999991 ஆனது 140,000 திர்ஹம்ஸிற்கும் மற்றும் 0586666663 என்ற எண்ணானது 100,000 திர்ஹம்ஸிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட, 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உணவு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரத்தை ஆதரிக்கும் விதமாக, துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), Etisalat மற்றும் du ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஏலத்தின் மூலம் மொத்தம் 53 மில்லியன் திர்ஹம்ஸ் திரட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!