வளைகுடா செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சவூதியின் ‘திறன் சரிபார்ப்பு திட்டம்’ எந்தெந்த தொழில்களுக்கு? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை பற்றிய அனைத்து விபரங்களும்..!!

சவுதி அரேபியாவில் வேலை செய்யவும் வசிக்கவும் திட்டமிடுபவரா நீங்கள்? அப்படியானால், சவுதி அரேபிய அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்த ‘திறன் சரிபார்ப்புத் திட்டத்தை (Skill Verification Programme)’ நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், இந்தியர்கள் உட்பட ஒரு சில நாட்டவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிய, சில குறிப்பிட்ட பணிகளுக்கு திறன் சரிபார்ப்பு திட்டம் (SVP) சோதனை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRSD) வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தின் படி, ஏற்கனவே பணிபுரியும் அல்லது வேலையைப் பெறத் திட்டமிடும் குறிப்பிட்ட நாட்டவர்கள், தங்கள் பணியில் தொடர எழுத்து மற்றும் நடைமுறைத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.

சவுதியின் தொழிலாளர் சந்தையில் தொழிலாளர்களின் திறன் அளவை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் பற்றியும், எந்தெந்த தொழில்களுக்கு இது பொருந்தும் என்பது பற்றிய தகவல்களும் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய விபரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திறன் சரிபார்ப்பு திட்டம்:

இது தொழிலாளரின் திறனை அறிய இரண்டு தேர்வுகளை நடத்துகிறது. எனவே, 30 நிமிடங்களுக்கு எழுத்துத் தேர்வும், 90 நிமிடங்களுக்கு நடைமுறைத் தேர்வும் நடைபெறும். ஏற்கனவே, சவுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் உள் பாதை (internal track) என்றும், அமைச்சகம் பட்டியலிட்டுள்ள தொழில்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளிப் பாதை (external track) என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்.

இதன் மூலம், சவூதிக்கு உள்ளே மற்றும் வெளியே என இரண்டு வகையான வெளிநாட்டு ஊழியர்களும் திறன் சரிபார்ப்பு சோதனையை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சவுதி அரேபிய அரசானது நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியேயும் தொழிலாளர்களை சோதனை எடுக்க அனுமதிக்கும் பல சோதனை மையங்களை அமைத்துள்ளது. மேலும், MHRSD திட்டத்தின் வெளிப்புற பாதையின் முதல் கட்டமாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் திறன் சரிபார்ப்பு சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

எந்தெந்த தொழில்களுக்கு சோதனை அவசியம்?

  1. பூச்சு வேலை செய்பவர் (Plasterer)
  2. வாகன எலக்ட்ரீஷியன் (Automative Electrician)
  3. தச்சு வேலை செய்பவர் (Carpentry)
  4. பிளம்பிங் வேலை செய்பவர் (Plumping)
  5. வெல்டிங் வேலை செய்பவர் (Welding)
  6. தொடர்பு (Communication) சார்ந்த வேலை செய்பவர்
  7. ஷட்டரிங் கார்பெண்டர் (shuttering Carpenter)
  8. உழுதல் (Tilling)
  9. இயந்திரங்கள் (Machines works)
  10. கொல்லன் (Blacksmith)
  11. ஓவியர் (Painting works)
  12. வாகன முதன்மை சேவை (Automotive Primary Service)
  13. வாகன மெக்கானிக் (Automotive Mechanics)
  14. கட்டுமானம் மற்றும் கட்டிடம் வேலை செய்பவர் (Construction and Building)
  15. எலக்ட்ரீஷியன் (Electricians)
  16. வெப்பமூட்டும் காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (Heating Ventilation and Air Conditioning)
  17. காரை பழுது பார்ப்பவர் (Car body Repair)

எப்படி சோதனையை எடுப்பது?

சவுதியில் ஏற்கனவே பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த திறன் சரிபார்ப்பு திட்டத்தில் பதிவு செய்வதற்கான படிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  1. முதலில் SVP இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  2. உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள சோதனை மையத்தைக் கண்டறியவும்.
  3. அப்பாய்ன்மென்ட்டை பதிவு செய்யவும்.
  4. அதன் பிறகு, உங்கள் SVP கணக்கில் உள்நுழையவும்.
  5. பின்னர், அங்குள்ள கூடுதல்  வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

சோதனைக்கான கட்டண விபரம்:

ஒட்டுமொத்தமாக, ஒரு நபர் திறன் சரிபார்ப்பு  சோதனையை எடுக்க 470 ரியால்கள் வரை செலவாகும்.

வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான படிகள்:

SVPயில் பட்டியலிடப்பட்டுள்ள தொழில்களுக்கு ஆட்சேர்ப்பை நடத்தும் நிறுவனங்களின் முதலாளிகள் பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்:

  1. முதலாளி உள்நுழைதல் – ஆட்சேர்ப்பு செய்யும் முதலாளி முதலில் SVP போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்
  2. ஒரு பேக்கேஜை செலுத்துதல் – அவர்கள் பணியமர்த்தவுள்ள தொழிலாளரின் சோதனைக்கு பணம் செலுத்த வேண்டும்.
  3. சந்திப்பை (appointment) முன்பதிவு செய்தல்  – பின்னர் அவர்கள் எந்த SVS மையத்திலும் பணியாளருக்கான சந்திப்பை பதிவு செய்யலாம். குறிப்பாக, தேர்வை எடுக்க, சரியான நியமன தேதியில் நியமிக்கப்பட்ட மையத்திற்கு பணியாளர் செல்ல வேண்டும்.
  4. முடிவு – இறுதியாக, தொழிலாளரின் சோதனை முடிவு முதலாளியின் டாஷ்போர்டில் காட்டப்படும். சோதனை முடிவு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!