அமீரக செய்திகள்

பிக் டிக்கெட் டிராவில் 20 மில்லியன் திர்ஹம்களை வென்ற இந்திய பெண்!! – நர்ஸாக பணிபுரிபவருக்கு கிடைத்த கிராண்ட் பரிசு..

அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வரும் பிக் டிக்கெட் ராஃபிள் டிராவில் இந்த மாதம் இந்தியாவைச் சேர்ந்த பெண்மணி 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார். அமீரகத்தில் செவிலியராக பணிபுரியும் லவ்சி மோல் அச்சம்மா என்பவர், இந்த மாதத்திற்கான பிக் டிக்கெட் அபுதாபி டிராவின் கிராண்ட் பரிசான 20 மில்லியன் திர்ஹம்களை வென்ற அதிர்ஷ்டசாலி என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

மே மாதத்திற்கான பிக் டிக்கெட் டிரா நேற்று சனிக்கிழமையன்று அபுதாபியில் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த டிராவில் மொத்தம் ஒன்பது போட்டியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  அதில் முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹம்ஸை அச்சம்மா தட்டிச் சென்றுள்ளார்.

கடந்த 21 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் அச்சம்மா வெற்றி பெற்றது குறித்து கூறிய போது, அவரது கணவர் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந்த டிக்கெட் வங்கியதாகவும், தற்பொழுது வென்ற பெரும் பரிசுத் தொகையை தனது உறவினருடன் பகிர்ந்துகொண்டும், பரிசுத்தொகையின் மற்றுமொரு பகுதியை தொண்டுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேசமயம், தங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காகவும் வெற்றி பெற்ற பணம் செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், சனிக்கிழமை நடைபெற்ற டிராவில் அச்சம்மாவைத் தவிர மற்ற நான்கு இந்தியர்கள் வெவ்வேறு சிறிய பரிசுகளை வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை, மேலும் நான்கு பரிசினை பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி மற்றும் நேபாளம் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் வென்றுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!