UAE: கொர்ஃபக்கன் ஆம்பிதியேட்டர் அருகிலேயே பிரம்மாண்ட குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஷார்ஜா..!!

ஷார்ஜாவின் சுற்றுலா துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு இடமாக கொர்ஃபக்கன் இருந்து வருகிறது. கடந்த ஒரு சில வருடங்களாக பல்வேறு புதிய நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குடியிருப்பாளர்களையும் சுற்றுலாவாசிகளையும் ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது குடியிருப்பு பகுதிக்கான திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் இருக்கக்கூடிய மாஸ்டர் டெவலப்பரான ஷார்ஜா டெவலப்மென்ட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி (Shurooq) சமீபத்தில் கொர்ஃபக்கன் மலைகளுக்கும் ஓமான் வளைகுடாவிற்கும் இடையில் அமைந்துள்ள உயர்தர ஃப்ரீஹோல்ட் திட்டமான அஜ்வான் – கோர்பக்கன் ரெசிடென்ஸை (Ajwan — Khorfakkan Residence) அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 65,269 சதுர மீட்டர் பரப்பளவில் முடிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் விசாலமான 2, 3 மற்றும் 4 படுக்கையறைகள் கொண்ட 184 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட ஆறு குடியிருப்பு கட்டிடங்கள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ரெசிடென்ஸியின் முதல் தள மட்டத்தில் உள்ள லேப் குளம் (lap pool), குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் kids pool போன்றவை பல்வேறு வகையான வசதிகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கோர்ஃபாக்கனின் ஆம்பிதியேட்டர் மற்றும் நீர்வீழ்ச்சியிலிருந்து (waterfalls) ஐந்து நிமிடங்களிலும் அல் ராபி ஹைக்கிங் பாதையிலிருந்து மூன்று நிமிடங்களிலும் அமைந்துள்ள இந்த திட்டத்தில் விளையாட்டுப் பகுதிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான குளங்கள் மற்றும் கிழக்குப் பகுதியில் வாட்டர் பார்க் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஸ்லைடுகள் மற்றும் நீர் விளையாட்டுகள், நீச்சல் குளங்கள், திறந்த கடற்கரைக்கான அணுகல் மற்றும் பொதுமக்களுக்கு அணுகக்கூடிய வசதிகளை இந்த வாட்டர்பார்க் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோர்பக்கான் திட்டம் குறித்து ஷூரூக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் ஒபைத் அல் கசீர் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், ஷார்ஜாவின் ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலாத் துறைகளில் கொர்ஃபக்கன் ஒரு மகத்தான நம்பிக்கைக்குரிய இடம் என்று கூறியுள்ளார். மேலும், இத்திட்டம் ஷார்ஜா குடியிருப்பாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் புதிய வழிகளை உருவாக்குவதையொட்டி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.