அமீரக செய்திகள்

துபாய்: உங்கள் வீட்டின் DEWA பில்லை கட்டுப்படுத்தி பணத்தை மிச்சப்படுத்த ஸமார்ட் ஆப்.. எப்படினு தெரியுமா..??

துபாயில் வசிப்பவரா நீங்கள்? உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரம் மற்றும் நீர் அளவுகளை புரிந்து கொண்டு, இவை வீணாக்கப்படுவதைக் கட்டுப்படுத்தி, உங்கள் பணத்தை நீங்கள் சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (Dubai Electricity and Water Authority – Dewa) Dewa ஸ்மார்ட் ஆப் மூலம் இதை செய்ய முடியும்.

நீங்கள் துபாயில் இருந்தாலும் அல்லது நாட்டிற்கு வெளியில் இருந்தாலும், இந்த ஸ்மார்ட் ஆப் மூலம் உங்கள் வீட்டின் நீர் மற்றும் மின்சார பயண்பாடுகளை கட்டுப்படுத்தி அதனை நிர்வகிக்க முடியும். மேலும், வீணாக்கப்படும் நுகர்வுகளைக் கண்டறிய High Usage Alert என்ற சேவையும் இதில் வழங்கப்படுகிறது. இது நீர் இணைப்புகளில் கசிவுகளைக் கண்டறிந்தால், உடனே வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்புகளை அனுப்புகிறது.

துபாயில் வசிப்பவர்களின் நலனுக்காக, Dewa ஸ்மார்ட் ஆப் மூலம் மின்சாரம் மற்றும் நீர் நுகர்வுகளை துபாய் குடியிருப்பாளர்கள் திறம்பட நிர்வகிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த “Make Smart Summer Choices Your Habit” என்ற பிரச்சாரத்தை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சர்வீஸ்:

குடியிருப்புகளில் மின்சாரம் மற்றும் நீர் பயன்பாட்டைப் புரிந்துகொள்ளவும், வீணாக்கப்படும் நுகர்வுகளைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை தெரிந்து கொள்ளவும் இந்த ஸ்மார்ட் சர்வீஸ் உதவியாக இருக்கும். மேலும், இது குடியிருப்பாளர்களை எளிய, புத்திசாலித்தனமான மற்றும் நிலையான நடைமுறைகளின் மூலம், நுகர்வுகளை நிர்வகிப்பதை ஊக்குவிக்கிறது.

இது குறித்து DEWA ஆணையத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சையத் முகமது அல் தயர் அவர்கள் கூறுகையில், இம்முயற்சியானது 2050 ஆம் ஆண்டுக்குள் துபாயில் கார்பனின் நிகர-பூஜ்ஜியத்தை அடைவதற்கு DEWA எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப இருப்பதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, ‘Today for Tomorrow’ என்ற கருப்பொருளின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்கால தலைமுறையினருக்கு ஒளிமயமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக கார்பன் தடயத்தைக் குறைத்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை இந்த முயற்சி ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு கசிவுகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது?

DEWA வின் இணையதளம் மற்றும் ஸ்மார்ட் ஆப்ஸ் ஆகியவற்றில் உள்ள ஸ்மார்ட் சர்வீஸ் மூலம் தண்ணீர் கசிவுகளை உடனடியாகக் கண்டறிந்து கழிவுகளைக் கட்டுப்படுத்தவும், வருடாந்திர, மாதாந்திர மற்றும் தினசரி நுகர்வு அறிக்கைகளைப் பெறவும் ‘Smart Living Dashboard’ என்ற சேவையைப் பயன்படுத்தலாம்.

அதுபோல, ‘My Sustainable Living Programme’ என்ற சர்வீஸ் மூலம், உங்கள் பகுதியில் உள்ள மற்ற வீடுகளுடன் தங்கள் நுகர்வுகளை ஒப்பிட்டு தனிப்பயனாக்கப்பட்ட டிப்ஸ்களைப் பெறலாம். மேலும், ‘Away Mode’ என்ற சர்வீஸ், நீங்கள் வெளியில் இருந்தாலோ அல்லது பயணம் செய்து கொண்டிருந்தாலோ உங்களது தினசரி மற்றும் வாராந்திர தரவுகளை மின்னஞ்சல் மூலம் பெறலாம்.

இதற்கிடையில் Self-Assessment என்ற tool ஆனது, உங்கள் நுகர்வுகளை மதிப்பீடு செய்ய உதவும். இறுதியாக, மதிப்பீட்டை முடித்த பிறகு, உங்கள் பயன்பாடு குறித்த விரிவான அறிக்கையை நீங்கள் பெறலாம்.

இவற்றைப் போல, ஆப்-இல் உள்ள Dewa Store என்ற சர்வீஸ், குடியிருப்பிற்குள் தவறுகள் ஏற்பட்டால், அவற்றைச் சரிசெய்யக் கூடிய நம்பகமான தொழில்நுட்ப சேவை வழங்குநர்களின் பட்டியலை உங்களுக்கு வழங்கும். அதுமட்டுமின்றி, உங்கள் வீடுகளை ஸ்மார்ட்டாக மாற்ற வேண்டுமெனில், Dewa Storeஇல் உள்ள சிறப்புத் தள்ளுபடிகளின் மூலம் பயனடையலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!