உலக செய்திகள்

நடுவானில் கெட்டுப்போன உணவு..!! 12 மணி நேர பயணத்தில் பசித்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரே ஒரு பீஸ் சிக்கன்..!!

கரீபியனில் இருந்து லண்டனுக்குச் சென்ற விமானத்தில் பயணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வைத்திருந்த உணவு கெட்டுப் போனதை அடுத்து, பயணிகளை ஏற்றிச்சென்ற ​​பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் உள்ள கேபின் குழுவினர் பயணிகள் அனைவருக்கும் மாற்று உணவை வழங்கினர்.

விமானத்தில் இருந்த பணி பெண்கள் 12 மணி நேர பயணத்தில் உணவு கெட்டுப்போனதை அடுத்து, பயணிகள் அனைவருக்கும் ஒரு துண்டு KFC சிக்கன் வழங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது விமானத்தின் கேட்டரிங் வண்டிகள் சரியாக குளிரூட்டபடாத காரணத்தினால் தயாரித்து வைத்திருந்த உணவுகள் கெட்டுப் போய்விட்டன என்றும், அதை உடனடியாக தூக்கி எறியப்பட்டன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உணவுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு ஏதாவது சாப்பிட வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடனடியாக கேஎஃப்சி சிக்கனின் பக்கெட்டுகள் வாங்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. இதனை ஒட்டி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், கேபின் குழுவினர் KFC சிக்கனை பயணிகளுக்கு வழங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!