ஈராக் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!! நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!!
வடக்கு ஈராக் நகரமான கராகோஷ் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 150 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
ஈராக்கின் நினிவே மாகாணத்தில் ஹம்தானியா பகுதியில் திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, மொசூலுக்கு கிழக்கே கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நகரத்தில் உள்ள பிரதான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeசுகாதாரத் துறையின் நடவடிக்கை:
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் தீக்காயங்கள் மற்றும் இதர சிகிச்சைகள் பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சைஃப் அல்-பத்ர் கூறியுள்ளார். அத்துடன் மோசமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்து தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், திருமண மண்டபத்தில் தீப்பிடித்து எரிவதையும், சைரன்கள் முழங்க ஆம்புலன்ஸ்கள் வருவதையும் மற்றும் இரத்த தானம் செய்ய மருத்துவமனை முன்பு டஜன் கணக்கான மக்கள் கூடுவதையும் காணலாம்.
தீ விபத்திற்கான காரணம்:
சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், திருமண மண்டபத்தின் வெளிப்புறம், நாட்டில் சட்டவிரோதமான மிகவும் எரியக்கூடிய பேனல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கூடுதலாக, தீ விபத்து ஏற்பட்டால் சில நிமிடங்களில் இடிந்து விழும் அதிக எரியக்கூடிய, குறைந்த விலை கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாக மண்டபத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.