உலக செய்திகள்

சிங்கப்பூரின் 9வது அதிபரானார் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகசுந்தரம்…

சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரின் முன்னாள் துணை பிரதம மந்திரி தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி, 70.4% வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட முக்கிய போட்டியாளரான திரு.Ng Kok Song, அவர்கள் 15.7% வாக்குகளை பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளரான முன்னாள் காப்பீட்டு நிர்வாகி டான் கின் லியான் 13.88% வாக்குகளை பெற்றுள்ளார். இந்நிலையில், “சிங்கப்பூர் அதிபராக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளராக திரு தர்மன் சண்முகரத்தினம் அறிவிக்கிறேன்” என்று தேர்தல் அதிகாரி டான் மெங் டுய் கூறினார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், செய்தியாளர்களை சந்தித்த திரு. தர்மன் அவர்கள் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த சிங்கப்பூர் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட இரு வேட்பாளர்களால் தான், தன்னுடைய வெற்றியானது மகத்தானதாக இருந்தது என்று கூறி இரு வேட்பாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார். தர்மன் அவர்களுக்கு எதிராக போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாராட்டுகளை தெரிவித்தனர். தேர்தலில் முறையாக வெற்றி பெற வேண்டும் என்று ஆரம்பம் முதலே வாக்கு சேகரித்த தர்மன் அவர்கள்,அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் சுயேச்சையாக இருக்க வேண்டும் என்பதால், ஆளும் மக்கள் செயல் கட்சியின் (People’s Action Party- PAP) உறுப்பினர் பதவியையும், தேர்தலுக்கு முன்னதாக அமைச்சரவையில் மூத்த அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியில் ஊழல் குறித்த புகார்கள் வெளியான நிலையில், ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில், சிங்கப்பூர் மக்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் அதிக வாக்கு வித்தியாசத்தில் தர்மன் அவர்களை வெற்றி பெற செய்துள்ளனர்.

சிங்கப்பூர் தேர்தலை பொருத்தவரை, இந்த ஆண்டு அதிகபட்சமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில்,வெற்றி பெற்றுள்ள தர்மன் அவர்கள், செப்டம்பர் 13ஆம் தேதி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!