அமீரக செய்திகள்

துபாயின் போக்குவரத்து நெரிசலை எளிதாக்க வரவுள்ள மூன்று முக்கிய சாலைத் திட்டம்..!!

கடந்த சில மாதங்களாக துபாயின் போக்குவரத்தை எளிதாக்கும் சில முக்கிய சாலை திட்டங்களை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் துபாய்-அல் அய்ன் சாலை மேம்பாட்டுத் திட்டம், அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்ட இன்ஃபினிட்டி பிரிட்ஜ் மற்றும் ஷேக் ரஷித் பின் சயீத் காரிடார் மேம்பாடு ஆகிய திட்டங்கள் அடங்கும்.

மேலும், ஆணையத்தின் உயர் அதிகாரிகள், இதனையடுத்து எமிரேட்டின் பல முக்கிய சாலைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட், உம் சுகீம் ஸ்ட்ரீட் மற்றும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் போன்றவற்றின் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்:

இதில் ஷேக் சையத் சாலையிலிருந்து 4.5 கிமீ நீளமுள்ள அல் கைல் சாலை வரையிலான இந்த பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலை மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

உம் சுகீம் ஸ்ட்ரீட்:

இத்திட்டத்தின் கீழ் அல் கைல் சாலையின் இன்டர்செக்சனில் இருந்து ஷேக் முகமது பின் சயீத் சாலை வரை சுமார் 4.6 கிமீ தொலைவிற்கு சாலையின் வாகனங்களின் திறனை ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்களாக அதிகரிக்க மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் கலீஜ் ஸ்ட்ரீட்:

இந்த மேம்பாட்டுத் திட்டத்தில், இன்ஃபினிட்டி பிரிட்ஜ் வளைவில் இருந்து கெய்ரோ ஸ்ட்ரீட் வரை 3 கிமீ நீளமுள்ள சாலையின் திறனை மேம்படுத்துவதுடன் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 12,000 வாகனங்கள் செல்லும் திறன் கொண்ட 1.65 கிமீ நீளமுள்ள மூன்று சுரங்கப்பாதைகள் கட்டும் பணி அடங்கும்.

மேற்கூறப்பட்டுள்ள மூன்று முக்கிய சாலைத் திட்டங்கள் பற்றியும், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்கள், RTA மேற்கொண்ட மூலோபாய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து மதிப்பாய்வு செய்த போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், துபாயின் சாலை நெட்வொர்க் உள்கட்டமைப்பின் விரைவான மேம்பாட்டை பிரதிபலிக்கும் முக்கிய குறிகாட்டிகள் குறித்து துபாய் பட்டத்து இளவரசருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹம்தானின் மதிப்பாய்வின் போது வெளியிடப்பட்ட விவரங்களின் படி, துபாயின் சாலை நெட்வொர்க்கின் மொத்த நீளம் 2006 இல் 8,715 லேன்-கிமீ இருந்து 2022 இல் 18,768 ஆக விரிவடைந்துள்ளது, இது 115 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி, எமிரேட்டின் சாலை நெட்வொர்க் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் துபாயை ஸ்வீடன், நார்வே மற்றும் ஜப்பானில் உள்ள நகர்ப்புற மையங்களுடன் உலகளாவிய நகரங்களில் ஒன்றாக இணைத்துள்ளது.

அதேபோல், லாஸ் ஏஞ்சல்ஸ், மாண்ட்ரீல், சிட்னி, பெர்லின், ரோம் மற்றும் மிலன் போன்ற முக்கிய உலகளாவிய நகரங்களைப் போல, துபாயும் மத்திய வணிக மாவட்டத்தில் (CBD) 10 கிமீ தூரம் பயணிக்கத் தேவையான சராசரி நேரத்தின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

உலகளவில் நெரிசல் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்கும் TomTom இன் 2022 போக்குவரத்து குறியீட்டு அறிக்கையின்படி, துபாயின் CBD இல் 10 கிமீ தொலைவிற்கு பயணிக்க ஆகும் நேரம் 12 நிமிடங்கள் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!