ஷாப்பிங் ஆஃபர்ஸ்

UAE: 75 சதவீத தள்ளுபடியுடன் எக்கச்சக்கமான வெகுமதிகளை வழங்கும் மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் தொடக்கம்..!!

ஷார்ஜாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் ஷார்ஜா சம்மர் ப்ரோமோஷனின் 2023-ம் ஆண்டிற்கான சீசன் கடந்த சனிக்கிழமையன்று கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் எமிரேட் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பிரபல முன்னணி சர்வதேச பிராண்டுகளுக்கு 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம்.

மேலும், இந்த அதிரடித் தள்ளுபடி விற்பனை சுமார் 65 நாட்களுக்குத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (SCCI) ஏற்பாடு செய்துள்ள இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் 100 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வெகுமதிகளாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அவற்றுடன் 100,000 திர்ஹம்களுக்கு மேல் மதிப்புள்ள வவுச்சர்கள், ஹோட்டல் பேக்கேஜ்கள், டூரிஸ்ட் பேக்கேஜ்கள் மற்றும் புதிய Nissan Patrol 2023க்கான பிரம்மாண்டமான டிராவையும் ஷார்ஜா சேம்பர் ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஷார்ஜா சம்மர் ப்ரோமோஷன்களின் 20 வது ஆண்டு விழா ஆகும். இதனைக் கொண்டாடும் வகையில், “Ya Hala Bsaifna in Sharjah” (ஷார்ஜாவில் கோடைக்காலத்தை வரவேற்கிறோம்) என்ற ஸ்லோகனின் கீழ், கவர்ச்சிகரமான நிகழ்வுகள், தள்ளுபடிகள், அனைத்து வயதினருக்கும் பார்வையாளர்களுக்கும் உணவளிக்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் பரிசுகள் என இந்த சீசனில் உயர்ந்த செலவினப் போக்குகளைப் பயன்படுத்த சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதாக SCCI இயக்குநர் ஜெனரல் முகமது அஹ்மத் அமின் அல் அவாடி என்பவர் கூறியுள்ளார்.

இது குறித்து SCCI இன் தகவல் தொடர்பு மற்றும் வணிகத் துறையின் உதவி இயக்குநர் அப்துல்அஜிஸ் முகமது ஷத்தாஃப் என்பவர் பேசுகையில், சில்லறை வணிகத் துறையை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், எமிரேட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வணிகங்களை ஊக்குவிக்கவும், ஷார்ஜா சேம்பர் தனது பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த கூட்டாண்மை நிறுவனங்களுடன் வலுவாக ஒத்துழைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!