அமீரகம் முழுவதும் 15,000 பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்த LULU குழுமம்..!!

அடுத்த மாதம் முதல் துவங்கவிருக்கும் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, அமீரகத்தின் பிரபலமான மற்றும் மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனமான லுலு குழுமம், தொண்டு நடவடிக்கைகள் மற்றும் விளம்பரம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதன் 15,000 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரை தள்ளுபடியை அறிமுகப்படுத்தியுள்ளது.
லுலு குழுமம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த விளம்பர பிரச்சாரம் குறித்து லுலு குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அஷ்ரப் அலி எம்.ஏ., கூறுகையில், இந்த சிறப்பு சலுகையின் கீழ் 15,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனைக்கு வரும் என்றும், இந்த பொருட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ரமலான் மாதம் முடியும் வரையிலும் விற்பனையில் இருக்கும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை, புனித மாதத்தை சிறந்த முறையில் கொண்டாட அமீரக குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தள்ளுபடி விற்பனை சலுகையை லுலு ஹைப்பர்மார்க்கெட், சூப்பர்மார்கெட் போன்ற விற்பனை நிலையங்களில் நேரடியாகவும் மற்றும் ஆன்லைனிலும் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்து கொள்ளலாம் என லுலு குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் தொகுப்பாக விற்பனை செய்யப்படும் ரமலான் கிட் பெட்டிகள் 99 திர்ஹம்ஸ் மற்றும் 149 திர்ஹம்ஸ் என இரண்டு அளவுகளில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.